இன்று (18) இடம்பெறவிருந்த, மின் துண்டிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தில் குறைக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அத்துடன், இன்று நான்கு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு .இடம்பெறவுள்ளது.
அதன்படி A முதல் L வரையிலான 12 வலயங்களுக்கும், P முதல் W வரையிலான 8 வலயங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் மூன்று மணித்தியாலங்களும், மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு இடம்பெறும்.
எவ்வாறாயினும் மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதனால் நாட்டில் , மின்வெட்டு ஒரு மணித்தியாலத்தால் குறைக்கப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் மூன்று மணித்தியாலம் 20 நிமிடங்கள் மாத்திரமே மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.