நானி மற்றும் நஸ்ரியா நடித்துள்ள `அடடே சுந்தரா’ திரைப்படத்தின் டீசர் 20-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
`நான் ஈ’ திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகம் தாண்டியும் பிரபலமடைந்தவர் நடிகர் நானி. அதன்பிறகு அவர் நடித்த பல திரைப்படங்களும் டோலிவுட் தாண்டியும் பிரபலமானது. சமீபத்தில் அவர் நடித்த கேங்க்ஸ்டர், ஷாம் சிங்காராய் திரைப்படங்களின் வெற்றியும் விமர்சனங்களும் நானிக்கான பிற மொழி ரசிகர்களுக்கான சாட்சி. அந்தப் படத்தை தொடர்ந்து, தற்போது நானி விவேக் ஆத்ரேயா இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது நானியின் நடிப்பில் வெளியாகும் 28-வது படமாகும்.
`அடடே சுந்தரா’ என தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தப் படம் காதல் மற்றும் நகைச்சுவை பாணியில் உருவாகும் என சொல்லப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நானிக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பின் நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த திரைப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் `அண்டி சுந்தரானிகி’ என்ற பெயரில் இப்படம் தயாராகி வருகிறது. போலவே `ஆஹா சுந்தரா’ என மலையாளத்தில் தயாராகிறது. தமிழகத்தில் மற்ற மொழி திரைப்படங்கள் வெளியாகி வெற்றியடைந்த வரும் நிலையில், மேலும் ஒரு திரைப்படம் அப்படி வரவுள்ளது.
View this post on Instagram
`அடடே சுந்தரா’ படத்தின் டீசர், நாளை மறுநாள் ஏப்ரல் 20-ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக் சாகர் இசையில் தயாராகும் இப்படம், வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சமீபத்திய செய்தி: ‘பீஸ்ட்’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ – ‘பாக்ஸ் ஆஃபீஸை’ உலுக்கிய முதல் வார வசூல் எவ்வளவு?