மும்பை: இந்திய பங்கு சந்தையானது வாரத் தொடக்கத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் முடிவடைந்துள்ளது.
இன்று காலை தொடக்கத்திலேயே பலத்த சரிவில் தொடங்கிய சந்தையானது, முடிவிலும் பலத்த சந்தைகள் சரிவில் தான் முடிவடைந்துள்ளன.
இது முந்தைய சில தினங்களாகவே தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில், முதலீட்டாளார்கள் புராபிட் செய்ய முற்பட்டிருக்கலாம். குறிப்பாக இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐடி பங்குகளில் செல்லிங் அழுத்தம் காணப்பட்டதும் இதற்கு முக்கிய காரணம் எனலாம்..
டாடா ஸ்டீலின் சூப்பர் முடிவு.. எகிறி வரும் பங்கு விலை.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்!
தொடக்கம் எப்படி?
இன்று காலை ப்ரீ ஓபனிங்கிலேயே சந்தையானது சற்று சரிவில் தான் தொடங்கியது. இதனையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 1129.62 புள்ளிகள் அல்லது 1.94% குறைந்து, 57,209.31 புள்ளிகளாகவும், நிஃப்டி 299.20 புள்ளிகள் குறைந்து, 17,176.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 950 பங்குகள் ஏற்றத்திலும், 1611 பங்குகள் சரிவிலும், 142 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
முடிவில் எப்படி?
இதனையடுத்து சென்செக்ஸ் முடிவில் 1172.19 புள்ளிகள் அல்லது 2.01% குறைந்து, 57,166.74 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 302 புள்ளிகள் அல்லது 1.73% புள்ளிகள் குறைந்து, 17,173.70 புள்ளிகளாகவும் முடிவுற்றுள்ளது. இதற்கிடையில் 1454 பங்குகள் ஏற்றத்திலும், 1990 பங்குகள் சரிவிலும், 135 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ்,நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 4% மேலாக சரிவிலும், பிஎஸ்இ சென்செக்ஸ் 2% மேலாகவும், நிஃப்டி 50, பேங்க் நிஃப்டி பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், ஹெல்த்கேர், நிஃப்டி ஆட்டோ,பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% கீழாகவும் சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள என் டி பி சி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச் டி எஃப் சி லைஃப், கோல் இந்தியா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டெக் மகேந்திரா, அப்பல்லோ ஹாஸ்பிட்டல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, டைட்டன் நிறுவனம், ஹெச் யு எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதுவே இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டெக் மகேந்திரா, விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
1400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
சென்செக்ஸ் முடிவில் 1172.19 புள்ளிகள் குறைந்து முடிவடைந்திருந்தாலும், கடந்த அமர்வின் முடிவு விலையுடன் ஒப்பிடும்போது, இன்றைய குறைந்தப்பட்ச லெவலுடன் ஒப்பிடும்போது 1400 புள்ளிகளுக்கு மேல் சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக இன்ஃபோசிஸ் பங்கு விலையானது 7% மேலாகவும், ஹெச்டிஎஃப்சி-யின் பங்கு விலை 4.81% மேலாகவும், டெக் மகேந்திரா 4.74% மேலாகவும், விப்ரோ 4.69% வீழ்ச்சி கண்டும், டிசிஎஸ் 3.67% வீழ்ச்சி கண்டும் முடிவடைந்துள்ளது.
என்ன காரணம்?
சந்தையில் அதிகரித்துள்ள ஏற்ற இறக்கம், பணவீக்கம், பொருளாதாரம் குறித்த கணிப்புகள், கடன் பத்திரங்களில் அதிகரித்துள்ள முதலீடு, வட்டி விகிதம் அதிகரிப்பு பற்றிய கவலை உள்ளிட்ட பலவும் பங்கு சந்தையில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளன. எப்படியிருப்பினும் மெட்டல்ஸ், ஹாஸ்பிட்டல்ஸ், ஹாஸ்பிட்டாலிட்டி, ஆயில் சுத்திகரிப்பு, கேப்பிட்டல் குட்ஸ் உள்ளிட்ட துறைகள் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
closing bell: sensex down 1400 points above on under heavy selling pressure
closing bell: sensex down 1400 points above on under heavy selling pressure/முதல் நாளே 1400 புள்ளிகளுக்கு மேல் காலி செய்த சென்செக்ஸ்.. கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..!