முதல் MIUI GO எடிஷனைப் பெறும் போக்கோ போன் எது தெரியுமா!

சியோமி
நிறுவனம், தனது வளர்ச்சிக்காக பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மலிவு விலை, பட்ஜெட், பிரீமியம் என அனைத்து வகுப்புகளிலும் நிறுவன தயாரிப்புகள் பாஸ் மார்க் வாங்குகிறது. தொழில் மேம்படுத்தல்கள் உடன் டெக் வளர்ச்சியையும் சியோமி தன் தயாரிப்புகளில் வெளிகாட்டுறது.

இந்நிலையில், நிறுவனம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, மலிவு விலை ஸ்மார்ட்போன்களை திறன்வாய்ந்ததாக மாற்ற
MIUI Go
ஸ்கின்னை அறிமுகம் செய்ய உள்ளது.
Android Go
எடிஷன் அடிப்படையிலான எம்ஐயுஐ கோ எடிஷன் ஸ்கின் மலிவு விலை பட்ஜெட் போன்களில் நிறுவப்படும்.

அதிக பாரம் இல்லாத செயலிகளைக் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு கோ பதிப்பின் செயல்பாட்டில் இது இயங்கும். இதன் காரணமாக பெரிய ரேம், ஸ்டோரேஜ் இல்லாத போன்களும் வேகமாக செயல்படும். இது, மலிவு விலை ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க:
வெறும் ரெண்டு லைட் – அதுக்காக விலைய இப்படி ஏத்துறதா!

போக்கோ சி40

இந்த புதிய ஸ்கின் முதன்முதலாக போக்கோ சி40 ஸ்மார்ட்போனில் நிறுவப்பட உள்ளது. இது குறித்து சில தகவல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மேலும், முற்றிலும் மாறுபட்ட
JR510 புராசஸர்
உடன் வெளியாக உள்ளது. இது சீனாவின், Lingsheng Electronic Technology Shenzhen Co. Ltd நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சிப்செட் என்று கூறப்படுகிறது.

ஆனால்,
Poco C40
ஸ்மார்ட்போன் வெளியீடு தேதி, விலை விவரங்கள், அம்சங்கள் குறித்த தகவல்களை நிறுவனம் இன்னும் உறுதிபடுத்தவில்லை. ஒருபுறம் லைட் இயங்குதளத்துடன் இந்த போன் வெளிவந்தாலும், பெயர் அறியாத நிறுவத்திடம் இருந்து வரும் புதிய புராசஸரை மக்கள் எப்படி தேர்வு செய்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க:

5 நிமிட சார்ஜ் போதும்; புதிய BoAt இயர்பட்ஸில் 1 மணிநேரம் அரபிக் குத்து கேட்கலாம்!

சில மாதங்களுக்கு முன், Realme நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட Realme UI R பதிப்புடன் C21Y ஸ்மார்ட்போனை அறிவித்தது. ஆனால் இந்த லைட் ரியல்மி ஸ்கின், பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதேபோல், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட C21Y தொடர் Realme C31 ஆனது Realme UI ஸ்கினின் சிறப்பு பதிப்போடு வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான நிறுவனங்கள், லைட் ஸ்கின்னை சோதனை செய்து வருகிறது. இருப்பினும், பயனர்களுக்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளும் அதில் அடங்கி இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க:

போன் இன்னும் வெளியாகல; அதுக்குள்ள லீக்கான விலை விவரங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.