ரூ.47907 கோடி இழப்பு.. முதலீட்டாளர்களைக் கதறவிட்ட இன்போசிஸ்..!

இந்தியாவின் 2வது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ்-ன் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 9 சதவீதம் வரையில் சரிந்து 2 வருட வீழ்ச்சியைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இந்தச் சரிவுக்கு முதலும் முக்கியக் காரணமாக இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் விளங்குகிறது.

அஜய் சேத்-க்கு உடல்நல பாதிப்பு.. மத்திய நிதியமைச்சகத்தில் மிகப்பெரிய மாற்றம்..!!

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் மாத காலாண்டு முடிவுகள் சந்தை கணிப்புகளை விடவும் குறைவான அளவீட்டை பதிவு செய்த காரணத்தாலும், ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி அளவீடுகள் நிலைப்பெற்று (normalisation) உள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ள காரணத்தாலும் இன்போசிஸ் பங்குகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் 9 சதவீதம் சரிந்து 2 வருட சரிவை பதிவு செய்துள்ளது.

மார்ச் காலாண்டு முடிவுகள்

மார்ச் காலாண்டு முடிவுகள்

மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் 12 சதவீதம் அதிகரித்து 5,686 கோடி ரூபாயும், வருவாய் 22.7 சதவீதம் உயர்ந்து 32,276 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. டாலர் அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் மார்ச் காலாண்டில் 4,280 மில்லியன் டாலர் உடன் 18.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

9 சதவீத சரிவு
 

9 சதவீத சரிவு

இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 1650 ரூபாயில் இருந்து 1592 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 6.81 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் 52 வார உயர்வாக 1953.70 ரூபாயாகவும், 52 வாரச் சரிவாக 1311.80 ரூபாயாகவும் உள்ளது.

இன்றைய சரிவின் மூலம் இன்போசிஸ் முதலீட்டாளர்கள் சுமார் 47907 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு லாபத்தை இழந்துள்ளனர்.

ரஷ்யா பிரச்சனை

ரஷ்யா பிரச்சனை

உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான போர் பிரச்சனையில் இந்திய நிறுவனங்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லாத நிலையில், இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி மற்றும் மருமகன் ரிஷி சுனக் பிரச்சனைகள் எதிர்கொள்ளும் காரணத்தால் ரஷ்ய வர்த்தகத்தை மொத்தமாக மூடிவிட்டு வெளியேறியுள்ளது இன்போசிஸ். இது முதலீட்டாளர்கள் மத்தியில் கருப்புப் புள்ளியாக மாறியுள்ளது.

ஈவுத்தொகை

ஈவுத்தொகை

இதை ஈடு செய்ய இன்போசிஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு மார்ச் காலாண்டில் ஒரு பங்கிற்கு 16 ரூபாய் ஈவுத்தொகை அறிவித்துள்ள நிலையில், 2022ஆம் நிதியாண்டுக்கு 31 ரூபாயை ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இன்போசிஸ் நிறுவனம் சுமார் 13,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஈவுத்தொகையாக அளிக்க உள்ளது.

அட்ரிஷன் ரேட்..

அட்ரிஷன் ரேட்..

ஆனால் இன்போசிஸ் நிறுவனத்திற்குப் பெரும் தலைவலியாக இருப்பது ஊழியர்களின் வெளியேற்றம் தான், மார்ச் காலாண்டில் அட்ரிஷன் ரேட் 27.7% ஆக உயர்ந்துள்ளது. இது டிசம்பர் காலாண்டில் 25.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை மார்ச் காலாண்டில் 3,14,015 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Infosys shares fall 9 percent; investors lost Rs 47907 crore today; After impacts of Q4 results

Infosys shares falls 9 percent; investors lost Rs 47907 crore today; After impacts of Q4 results ரூ.47907 கோடி இழப்பு.. முதலீட்டாளர்களைக் கதறவிட்ட இன்போசிஸ்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.