இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, இன்று முதல் வங்கிக்கான வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, ஏப்ரல் 18 முதல் வங்கிகள் காலை 9 மணிக்கே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வங்கிகள் மூடப்படும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வர்த்தக நேரத்தை மாற்றியது ரிசர்வ் வங்கி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை..!
நேரம் அதிகரிக்கும்
நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக பரவி வந்த நிலையில், வங்கிகளின் வேலை நேரத்தினை ரிசர்வ் வங்கி குறைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி நேரம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சேவை பெறும் நேரம் இன்னும் அதிகரிக்கும்.
இதற்கும் நேரம் மாற்றம்
இதோடு அந்நியச் செலாவணி சந்தை மற்றும் அரசுப் பத்திரங்களில் பரிவர்த்தனைகள் செய்ய முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தனது வெளியீட்டில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18, 2022 முதல், ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைச் சந்தைகளான அந்நியச் செலாவணி இந்திய ரூபாய் வர்த்தகம், ஃபாரெக்ஸ் டெரிவேடிவ்கள், ரூபாய் வட்டி விகித டெரிவேடிவ்கள், கார்ப்பரேட் பத்திரங்களில் ரெப்போ போன்றவற்றின் வர்த்தகங்களை, கோவிட் தொற்று நோய்க்கு பின், முந்தைய நேரங்களிலேயே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நேரம் மாற்றியமைப்பு
ஆக ஏப்ரல் 18 முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை சந்தைகளின் வர்த்தக நேரம் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ள நிலையில், அரசு இத்தகைய முடிவினை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நேர நிலவரம் என்ன?
call.நோட்டீஸ்/ டெர்ம் மணி – 9am – 3.30am
அரசு பத்திரங்களுக்கான ரெப்போ – 9.00am – 3.30pm
அரசு பத்திரங்களுக்கான மூன்றாம் நபர் ரெப்போ – 9.00am – 3.00pm
கமர்ஷியல் பேப்பர் மற்றுன் டெபாசிட் சான்றிதழ்கள் – 9.00am – 3.30pm
அரசு பத்திரங்களுக்கான சந்தை ரெப்போ – 9.00am – 2.30pm
அரசு பத்திரங்கள் (Central Government Securities, State Development Loans and Treasury Bills) – 9.00am – 3.30pm
அந்நியச் செலாவணி இந்திய ரூபாய் வர்த்தகம் –
9.00am – 3.30pm
bank alert! Banks new timings from today: check details
bank alert! Banks new timings from today: check details/வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. வங்கி நேரத்தில் இன்று முதல் மாற்றம்.. !