புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில், கல்வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ஊர்வலம் நடந்தது. மசூதி ஒன்றை ஊர்வலம் கடந்து சென்ற போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்சார் என்பவர் ஊர்வலத்தில் சென்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மோதலாக மாறி இரு தரப்பினரும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அஸ்லாம் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் டெல்லி போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் மெதாலால் மீனா என்பவர் கையில் குண்டுபாய்ந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வன் முறையில் 8 போலீஸார் உட்பட 9 பேர் காயம் அடைந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம், மோதலில் ஈடுபட்ட இன்னும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
10 சிறப்பு குழுக்கள்
இந்த வன்முறை தொடர்பாக, கொலை முயற்சி, ஆயுத சட்டம் உட்பட பல பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 சிறப்பு குழுக்களை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் அமைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜகாங்கீர்புரி பகுதியைச் சேரந்த நூர் ஜகான் என்பவர் கூறுகையில், ‘‘ இந்து மத ஊர்வலத்தில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது இதுதான் முதல் முறை. மசூதியில் இருந்து வன்முறை தொடங்கவில்லை’’ என்றார்.
ஹனுமன் ஜெயந்தி ஊர் வலத்தில் பங்கேற்ற ராகேஷ் என்பவர் கூறுகையில், ‘‘ஊர்வ லம் அமைதியாக சென்று கொண் டிருந்தபோது, கல்வீச்சு சம்பவம் நடந்தது. அதன்பின் நாங்கள் பதிலுக்கு கல்வீசினோம்’’ என்றார்.
இந்த வன்முறை சம்பவத்தை யடுத்து, டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் மத்திய போலீஸார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக் குள் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி போலீஸார் ஜகாங்கீர் பகுதியில் அமைதிக் குழு ஒன்றை ஏற்படுத்தி வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், இந்த மோதல் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தனர்.
நிலவரம் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருவதாக டெல்லி காவல் துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானாவிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விசாரித்தார். இச்சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச் சகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
கல்வீச்சு சம்பவத்துக்கு ட்விட் டரில் கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒவ்வொருவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
– பிடிஐ