ஹாட்ரிக் விக்கெட்களால் எதிரணி வீரர்களை கலங்கடித்த சாஹல்: மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மனைவி!


கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்களை எடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தள்ளியுள்ளார்.

இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு சதமடித்த ஜோஸ் பட்லர் முக்கிய காரணம் என்றாலும், அவரின் உழைப்பு வீணாகி வெற்றி பறிபோகி விடக்கூடும் என்ற இக்கட்டான நிலைமையில் முக்கிய வீரர்களின் விக்கெட்களை ஒரே ஓவரில் அடுத்தடுத்து தட்டி தூக்கிய யுஸ்வேந்திர சாஹல் அசத்தியுள்ளார்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களுக்கு 40 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற வலிமையான நிலையில் இருக்கும் பொது 17வது ஓவரை வீசிய ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர், யுஸ்வேந்திர சாஹல் முதல் பந்திலேயே கொல்கத்தா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயரை விக்கெட் எடுத்தோர்.

இருப்பினும் வரிசையில், 85 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்காக நிலைத்து நின்ற கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரையும் அந்த ஓவரின் நான்காவது பந்தில் தட்டித்தூக்க, கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பு சிறிது சிறிதாக பறிப்போனது.

ஆனாலும் கடந்த போட்டியில் பேட்டிங்கில் பொளந்து கட்டிய பாட் கம்மின்ஸ் மற்றும் சிவம் மாவி களத்தில் நிற்க அவர்களையும் ஓவரின் 5வது மற்றும் 6வது பந்தில் விக்கெட் தூக்கினர்.

இதனால் ஹட்-ட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டியதுடன் ஓவரே ஓவரில் நான்கு விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையம் யுஸ்வேந்திர சாஹல் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த போட்டியில் மட்டும் 5 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றுள்ளார்.

கொல்கத்தா அணியை சுக்குநூறாக நொறுக்கிய சாஹல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி! 

மேலும் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர், யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டியதை பார்த்து மைதானத்தில் இருந்த அவரது மனைவி துள்ளிக்குதித்து கொண்டாடியதை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.