ஹேக் செய்யப்பட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன் கணினிகள்: முக்கிய தகவல்கள் கசிந்து இருக்கலாம் என அச்சம்!


பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கணினிகள் உலகின் மிகப்பயங்கரமான மற்றும் சக்தி வாய்ந்த சைபர் ஆயுதங்கள் கொண்டு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தர உளவு மென்பொருளான பெகாசஸ் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கணினிகளை குறிவைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உளவு மென்பொருளானது கடந்த ஜூலை 2020 ஆம் ஆண்டு எண்10 என்ற நெட்ஒர்க்கை பயன்படுத்திய சாதனங்களில் காணப்பட்டதாக சைபர் போஃபின்கள் தெரிவித்திருந்தனர், மேலும் இதே வகை அத்துமீறல்கள் வெளியுறவு அமைச்சத்தின் மீதும் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கணினிகளை மிகுந்த சக்தி வாய்ந்த சைபர் ஆயுதங்கள் கொண்டு ஹேக் செய்து அத்துமீறல் நடந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தவகை உளவு மென்பொருள்கள் கணினி அல்லது தொலைபேசியின் திரை மற்றும் கமெராகளை ஹேக் செய்து படம்பிடிப்பது, உரையாடல்களை பதிவு செய்வது, தொலைப்பேசி அழைப்புகளை கவனிப்பது, மற்றும் தகவல்களை அனுப்புவது போன்ற அத்துமீறல்களை செய்யும் வல்லமை பெற்றது என தெரியவந்துள்ளது.

இதனை பயனர்களை அனுப்பப்படும் லிங்க்களை கிளிக் செய்வதை தூண்டுவதன் மூலம் இந்த உளவு மென்பொருள் சாதனங்களில் தொற்றிக்கொள்ளும், ஆனால் தற்போதைய புதியவகை உளவு மென்பொருள் பயனர்களின் எந்தவொரு தொடுதலும் இல்லாமல் சாதனங்களை தொற்றிக்கொள்ளும் அமைப்பை கொண்டுள்ளது.

பல டவுனிங் ஸ்ட்ரீட் சாதனங்கள் உட்பட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கணினிகள் சோதனை செய்யப்பட்டதில் எந்த கணினி பாதிக்கப்பட்டு உள்ளது என்று நிறுவமுடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எத்தகைய தகவல்கள் திருடப்பட்டு உள்ளன என்பது இதுவரை தெரியவில்லை எனவும், ஆனால் நிச்சியமாக தகவல் எடுக்கப்பட்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அச்சப்படுகின்றனர்.

தாக்க தயாராகும் புடின்…எல்லையில் பறந்த அணுஆயுதப் போர்விமானம்: பரபரப்பு வீடியோ ஆதாரம்! 

இதுகுறித்து அரசாங்க செய்தித்தொடர்பாளர் பேசியபோது, பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிடமுடியாது என தெரிவித்துள்ளார்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.