குறைந்த அளவிலான உதவித்தொகையை வழங்கி, மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சொற்ப அளவிலான உதவித் தொகையை வழங்கி, தமிழக சமூக நலத்துறை அவமானப் படுத்தகூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய், 1500 ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும் என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை அதிகரித்து வழங்கும் விவகாரத்தில், சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை என்றும் தலைமை நீதிபதி அமர்வு தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து விளக்கமளிக்க சமூக நலத் துறையின் முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.