மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடை கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று, டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இதுதொடர்பாக திட்டத்தை வகுக்க வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் திட்டத்தை வகுக்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் செயல்படக்கூடிய டாஸ்மார்க் கடை மதுபாட்டில்களை, மலைவாழ் உயிரினங்கள் செல்லக்கூடிய வழித்தடங்களில் உடைத்து வீசப்படுவதால் உயிரினங்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி ஒன்று வைரல் ஆகியது. இந்த காணொளி குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் சிறப்பு அமர்வு, மதுபான கடைகள் மூலமாக வீசப்படும் பாட்டில்கள், சுற்றுலா பயணிகள் எடுத்துவரும் கண்ணாடி பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுவதால், அதனை மிதிக்கும் வனவிலங்குகள் காயம் அடைந்து மூன்று மாதத்தில் உயிர் இழக்கின்றன.
இது மிகுந்த வேதனையளிக்கிறது. இதனை தடுப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டும். கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக மாற்று பொருளை பயன்படுத்த வேண்டும் என்றுஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
இதுவரை டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை, கடைகளை மாற்றி அமைப்பது குறித்தும் இந்த முடிவுகள் எடுக்கவில்லை. இதனையடுத்து நீதிபதிகள், டாஸ்மார்க் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்வதற்கு அறிக்கையை நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் வரும் 25 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்படி சமர்ப்பிக்கவில்லை என்றால் மலை பிரதேசங்களில் செயல்படக்கூடிய டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.