ரியல்மி புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரூ.15,000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும். Realme தனது புதிய ஸ்மார்ட்போனான
Realme Q5i
ஸ்மார்ட்போனை சீன டெக் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பட்ஜெட் விலைப் பிரிவில் இடம் பிடித்துள்ளது. Realme Q5i இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மெமரி, 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மெமரி ஆகிய இரு விருப்பத் தேர்வுகளில் வருகிறது. இதில் 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட டிஸ்ப்ளே உள்ளது.
Realme Q5i 4ஜிபி ரேம் வேரியன்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 14,300 (1199 யுவான்) ஆகவும், 6ஜிபி ரேம் சுமார் ரூ.15,550 (1299 யுவான்) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய Realme போன் 11 ஜிபி ரேம் (5 ஜிபி விர்ச்சுவல்) வசதியுடன் வருகிறது. 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது.
ரியல்மி க்யூ5ஐ
ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து விரிவாகக் காணலாம்.
டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம் – போட்டி ஆப்ஸ்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் ஆஃபர்கள்!
ரியல்மி Q5i அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட 6.58″ அங்குல முழுஅளவு எச்டி+ டிஸ்ப்ளே உள்ளது. 20:9 என்ற விகிதத்துடன் இந்த டிஸ்ப்ளே வருகிறது. இதன் ரெப்ரெஷ் ரேட் 90Hz ஆக உள்ளது. டச் சேம்பிளிங் ரேட் 180Hz ஹெர்ட்ஸ் வரை இருக்கிறது. Realme Q5i போனில் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Realme UI 3.0 ஸ்கின் நிறுவப்பட்டுள்ளது.
Realme Q5i ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் 6GB வரை ஆதரவு தரும் LPDDRx ரேம், 128GB வரை உள்ள UFS2.2 ஸ்டோரேஜ் மெமரியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது MediaTek டிமென்சிட்டி 810 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 5ஜிபி வரை ஆதரிக்கும் விர்ச்சுவல் ரேம் அம்சமும் இந்த போனில் உள்ளது.
10,000mAh பேட்டரி போன் தெரியுமா – இப்படியும் ஸ்மார்ட்போன் இருக்கா!
ரியல்மி Q5i கேமரா
ஸ்மார்ட்போனின் கேமராவானது, இரண்டு லென்ஸுகள் கொண்டு LED பிளாஷ் லைட்டுடன் வருகிறது. இது 13MP மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய இரண்டு கேமராக்களை உள்ளடக்கியது. செல்பி விரும்பிகளுக்காக 8MP மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh திறன்வாய்ந்த பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஊக்குவிக்க 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி போனின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.