தமிழகத்தில் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மேகலாயாவில் நடந்த கார் விபத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.
மேகாலயாவில் இன்று தொடங்கும் 83வது தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தமிழக மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கார் விபத்தில் காரை ஓட்டிய டிரைவரும் உயிரிழந்துள்ளார்.