Is it necessary to wear a bra for breast health, or can it be avoided? Find out: பெண்கள் உள்ளாடையான ப்ரா அணிவதா அல்லது வேண்டாமா? என்ற விவாதம் எப்போதும் இருந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள பல பெண்கள் ப்ராவை ஒரு எரிச்சலூட்டும் பொருளாக பார்க்கிறார்கள். இந்த பெண்கள் ப்ரா அணியாமல் இயல்பாக இருக்க விரும்புகிறார்கள்.
அதேநேரம் சில பெண்கள், ப்ரா இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதைப் பற்றியோ அல்லது வீட்டிற்குள்ளேயே இருப்பதைப் பற்றியோ நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். இவர்கள் எப்போதும் ப்ரா அணிய விரும்புபவர்கள். நீண்ட காலத்திற்கு ப்ரா அணியாமல் விட்டால் மார்பகங்கள் தொங்கி தொங்கி, அவற்றின் சுற்றளவு மற்றும் வடிவம் மாறிவிடும் என்ற நம்பிக்கைகளும் உள்ளன.
டாக்டர் க்யூட்ரஸ் எனும் டாக்டர் தனயாவின் கூற்றுப்படி, ப்ரா அணிவது அல்லது அணியாதது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது, ஏனெனில் இது ஒரு “ஃபேஷன்” மட்டுமே என்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில், ப்ரா அணிவது தனிப்பட்ட விருப்பம் என்று விளக்குகிறார். ப்ரா அணிவது தங்கள் மார்பகங்களை எடுப்பாக காட்டும் என பலர் நினைத்தாலும், இது தனிப்பட்ட விருப்பம் என்று டாக்டர் தனயா கூறுகிறார்.
இதையும் படியுங்கள்: பளபளக்கும் சருமத்துக்கு வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை.. எப்படி சாப்பிடுவது?
“சிலர் ப்ரா அணிந்திருக்கும் போது தங்கள் உடல் தோற்றத்தை விரும்புகிறார்கள்… சிலருக்கு ப்ரா அணியாமல் விளையாடுவது மிகவும் கடினம், குறிப்பாக பெரிய மார்பகங்களை உடையவர்களுக்கு” என்று டாக்டர் தனயா கூறுகிறார்.
ப்ரா அணிய விரும்பினால், அவர்கள் அதை சுதந்திரமாக செய்யலாம். அதே போல் அணிய விரும்பாதவர்கள் அதை அணிய தேவையில்லை என்று மருத்துவர் கூறுகிறார். “ப்ரா அணியாததால் உங்கள் மார்பகங்கள் தொங்கி போகாது அல்லது தளர்வடையாது. அண்டர் வயர்டு ப்ரா மற்றும் பிளாக் ப்ராக்கள் உங்களுக்கு புற்று நோயைத் தராது. இது உண்மையிலேயே விருப்பத்திற்குரிய விஷயம், ”என்று அவர் கூறுகிறார்.
மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.