பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையில் முழு கொள்ளளவு 105 அடியாக உள்ளது. நீர்மட்டம் 82.59 அடியாகவும், நீர் வரத்து 182 கன அடியாகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் 3,000 கன அடியாகவும் நீர் இருப்பு 17.09 டிஎம்சி ஆகவும் உள்ளது.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையில் நீர்மட்டம் 104.81 அடியாக உள்ளது. நீர்வரத்து: 2,360 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1500 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 71.21 டிஎம்சியாக இருக்கிறது.
பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 12ஆவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்
தமிழகத்தில் இன்று வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
2,000 கோடி பட்ஜெட்.. 9 புதிய மேம்பாலங்கள்.. புதிய உயரத்தை எட்டும் நம்ம சென்னை!
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5014க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சவரன் தங்கம் ரூ.40,112க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,470க்கும், சவரண் தங்கம் ரூ.43,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“