Tamil News Today Live: கலந்தாய்வு முறைகேடு குறித்து தமிழக அரசுககு நீதிமன்றம் கேள்வி

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 12ஆவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilnadu news update: தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.2,600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

India News Update: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மத மோதல்களை கண்டித்தும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

World news update: உக்ரைனின் மரியுபோல் நகரம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. இதையடுத்து, உக்ரைன் வீரர்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் அனைவரும் உயிர் தப்பலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யாவுக்கு இடையே 50 நாட்களை கடந்து போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

IPL update: பஞ்சாப்-ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கேவுக்கு இது 5ஆவது தோல்வி ஆகும். குஜராத் அணிக்கு கிடைத்த 5ஆவது வெற்றி ஆகும்.
புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
14:40 (IST) 18 Apr 2022
உ.பி.யில் மீண்டும் முககவசம் கட்டாயம்

உத்தர பிரதேசத்தில் முககவசம் அணிவதை மாநில அரசு மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் உ.பி. அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

14:39 (IST) 18 Apr 2022
டெல்லி அணியில் மேலும் 2 பேருக்கு கொரோனா?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணியில் ஆடிவரும் வெளிநாட்டு வீரர் ஒருவருக்கும், அணி நிர்வாகத்தில் ஒருவருக்கும் பாதிப்பு என தகவல் கூறுகின்றன

14:38 (IST) 18 Apr 2022
இளம் டேபிள் டென்னிஸ் வீரர் மரணம் : பிரதமர் மோடி இரங்கல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளன் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

13:59 (IST) 18 Apr 2022
கலந்தாய்வு முறைகேடு குறித்து தமிழக அரசுககு நீதிமன்றம் கேள்வி

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு இன்றி மாணவர் சேர்க்கை முறைகேடு நடைபெற்றது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாதது ஏன்? உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்

13:28 (IST) 18 Apr 2022
TET தேர்வு – காலக்கெடு நீட்டிப்பு *

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்.26 வரை நீட்டிக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

13:23 (IST) 18 Apr 2022
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதில் *நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு .இருப்பதாக கூறியுள்ளது.

13:00 (IST) 18 Apr 2022
கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு!

கோடை காலத்தில் 2,500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கோடை கால மின் தேவை 17,196 மெகாவாட். எனவே கூடுதல் மின்சாரம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி!

12:59 (IST) 18 Apr 2022
கொடநாடு வழக்கு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுகவை சேர்ந்த அனுபவ் ரவி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன்ர்.

12:59 (IST) 18 Apr 2022
முல்லை பெரியாறு விவகாரம்!

மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையும் அடக்கம். அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் உள்ளிட்டவை கூட அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன. அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் ஒரு வருடம் ஆகும். அனைத்து அணைகளும் பாதுகாப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். பராமரிக்கும் பொறுப்பை நம்மிடம் அணை பாதுகாப்பு சட்டம் கொடுத்துள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என சட்டப்பேரவையில் துரைமுருகன் விளக்கம்!

12:18 (IST) 18 Apr 2022
முல்லை பெரியாறு அணை விவகாரம்!

முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது கேரள அரசின் நட்பை பயன்படுத்தி, முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவை அதிகரிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தினார்.

12:12 (IST) 18 Apr 2022
இளையராஜாவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆதரவு!

இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லையென்றால், விமர்சிப்பதா? ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் கூட்டணிக்கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்தால் எதிர்ப்பதா? ஆதரவாக பேசவில்லையென்பதற்காக இளையராஜாவை விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என இளையராஜாவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆதரவு தெரிவித்துள்ளார்.

12:11 (IST) 18 Apr 2022
டென்னிஸ் வீரர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி!

கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

11:41 (IST) 18 Apr 2022
ஆளுநர் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை!

தேநீர் விருந்து புறக்கணித்ததில் ஆளுநர் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை. நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்? நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும் என சட்டப்பேரவையில் முக ஸ்டாலின் விளக்கம்!

11:13 (IST) 18 Apr 2022
தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

கடந்த 2ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

11:09 (IST) 18 Apr 2022
ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து!

லக்கீம்பூர் வன்முறை சம்பவத்தில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஒரு வாரத்துக்குள் சரணடையவும் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10:52 (IST) 18 Apr 2022
இந்தி எதற்கு? நடிகர் சத்யராஜ் கேள்வி

நாம் பிழைக்கப்போகிற இடத்தில் எந்த மொழி தேவைப்படுகிறதோ அதனை கற்றுக்கொள்ளலாம். ஆனால், கேரளாவில் வேலைக்கு செல்வதற்கு எதற்கு இந்தி? என்று நடிகர் சத்யராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

10:42 (IST) 18 Apr 2022
சேலத்தில் தொடர் திருட்டு-ஈரானியர்கள் கைது

சேலத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளி உட்பட 3 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

10:23 (IST) 18 Apr 2022
இலங்கை புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

புதிய அமைச்சரவையில் 18 பேர் இடம்பெற உள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று பதவியேற்கிறது புதிய அமைச்சரவை. இலங்கை நெருக்கடி சூழ்நிலைக்கு மத்தியில் புதிய அமைச்சரவை பதவியேற்பது குறிப்பிடத்தக்கது.

10:15 (IST) 18 Apr 2022
சட்டப்பேரவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி

தமிழ்நாட்டை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

10:05 (IST) 18 Apr 2022
காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழு புதிய அறிவிப்பு

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் அடுத்த பாடலான Dippam Dappam விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

09:40 (IST) 18 Apr 2022
எண்ணூர் கடல் அரிப்பு-தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

எண்ணூரில் கடல் அரிப்பை தடுக்க பாறாங்கற்களைக் கொட்டும் திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட அனுமதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

09:33 (IST) 18 Apr 2022
விவசாயிகளுக்கு தோழன் இந்த அரசு-தமிழக முதல்வர்

விவசாயிகளுக்கு அரசு உற்றதோழனாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

09:32 (IST) 18 Apr 2022
உதகையில் கர்ப்பிணிகள் முன் யோகா செய்த சுகாதார அமைச்சர்

உதகை அருகே, கர்ப்பிணிகள் முன்னிலையில் யோகா செய்து காண்பித்தார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

09:20 (IST) 18 Apr 2022
பிரதமர் இன்று குஜராத் பயணம்

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் ரூ.22,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

09:01 (IST) 18 Apr 2022
போக்குவரத்து நெரிசல்

4 நாட்கள் தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பியதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்; உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

08:44 (IST) 18 Apr 2022
இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை

4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.