அமெரிக்காவில் பொது போக்குவரத்தின் போது முககவசம் அணியும் உத்தரவு ரத்து

அமெரிக்காவில் பொது போக்குவரத்தின் போது முக கவசம் அணியும் உத்தரவை புளோரிடா மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது.

பெருகி வரும் கொரோனா பரவலை கடுப்படுத்த பொது போக்குவரத்தின் போது மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மே 3ஆம் தேதி வரை அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆணையம் நீட்டித்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய  புளோரிடா மாவட்ட நீதிமன்றம் முக கவசம் கட்டாய உத்தரவை ரத்து செய்தது. மேலும் மக்கள் முக கவசம் அணிய உத்தரவிட அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் எந்த சட்ட அதிகாரமும் கிடையாது என உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.