அமைச்சரவை மாற்றம் எப்போது? முதல்வர் விளக்கம்!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து,
பாஜக
ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்கொடி தூக்கியதால், அவர் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் கர்நாடகாவின் புதிய முதல்வராக கடந்த ஆண்டு
பசவராஜ் பொம்மை
பதவியேற்றார்.

இந்த நிலையில், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில்
அமைச்சரவை மாற்றம்
அல்லது விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றதால்,
அமைச்சரவை விரிவாக்கம்
தள்ளிப்போனது. தற்போது, தேர்தல் முடிந்து 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

அம்மாநிலத்தை பொறுத்தவரை அமைச்சரவையில் ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. இதில் 4 இடங்கள் கடந்த ஓராண்டாகவும், ஈசுவரப்பா ராஜினாமாவால் மற்றுமொரு இடமும் காலியாக உள்ளது. இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை கவனத்தில் கொண்டு அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக மேலிடமும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மேலிடத்தில் இருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னர், டெல்லி செல்லும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அங்கு வைத்து அமைச்சரவையை மாற்றியமைப்பதா அல்லது விரிவாக்கம் செய்வதா என்று மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே, கர்நாடக மாநில பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்ய ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. இதனால், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எங்கள் கட்சியின் தேசிய தலைவா் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தினேன். அவர், டெல்லியில் இதுபற்றி ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய பிறகு எனக்கு அழைப்பு விடுப்பதாக கூறினார். அழைப்பு வந்த பின்னர் டெல்லி செல்லவுள்ளேன். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறதா அல்லது மாற்றி அமைக்கப்படுகிறதா என்பது டெல்லியில் தான் தெரியவரும்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.