எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட சில வங்கிகள் தங்களது எம்சிஎல்ஆர் விகிதங்களை உயர்த்திய நிலையில், அதனை தொடர்ந்து தற்போது தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியும் அதன் MCLR விகிதத்தினை உயர்த்தியுள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தின் படி, இவ்வங்கியானது 5 அடிப்படை புள்ளிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தினை அதிகரித்துள்ளது.
இந்த வட்டி விகிதமானது ஏப்ரல் 18, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இனி கடன்களுக்கான மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வீட்டுக் கடன், கார் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
மீடியம் டெர்ம் விகிதங்கள்
மீடியம் டெர்மில் எம்சிஎல்ஆர் விகிதமானது ஓவர் நைட், ஒரு மாதம், மூன்று மாதம் மற்றும் ஆறு மாதத்திற்கு 0.05 சதவீதம் அதிகரித்துள்ளது. இது முறையே 7.15%, 7.15% 7.25% மற்றும் 7.30% ஆக முறையே உள்ளது. இதே ஒரு வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.35% ஆகவிம், இரண்டு வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.45% ஆகவும் அதிகரித்துள்ளது.இதே 3 வருடத்திற்கான விகிதமானது 7.55% ஆகவும் அதிகரித்துள்ளது.
பேஸ் ரேட்
இதே ஆக்ஸிஸ் வங்கியானது Effective base rate விகிதமானது 8.45% உள்ளது. இது கடந்த 23 செப்டம்பர் 2021 முதல் அமலில் உள்ளது நினைவுகூறத்தக்கது. இதே ஏப்ரல் 12ல் இருந்து பேங்க் ஆப் பரோடா அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தினை 5 அடிப்படை புள்ளிகளையும், இதே ஏப்ரல் 15ல் இருந்து எஸ்பிஐ வங்கி அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தினை 10 அடிப்படை புள்ளிகளும் அதிகரித்துள்ளன.
இனி என்னவாகும்?
ஒவ்வொரு வங்கியாக தங்களது எம்சிஎல்ஆர் விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இது மற்ற வங்கிகளையும் அதிகரிக்க தூண்டும். இதன் காரணமாக வட்டி விகிதமானது விரைவில் மற்ற வங்கிகளிலும் அதிகரிக்கலாம். மொத்தத்தில் கடன்களுக்கான வட்டி விகிதமானது விரைவில் அதிகரிக்கலாம். இதுவரை வாடிக்கையாளார்கள் செலுத்திய மாத தவணையை விட அதிகமாக செலுத்த நேரிடலாம்.
வட்டி அதிகரிக்கலாம்.
குறிப்பாக வீட்டுக் கடன், வீட்டு அடமானக் கடன், கார் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதமானது அதிகரிக்கலாம். கடந்த ஏப்ரல் 2016 முதல் செயல்படுத்தப்பட்ட இந்த எம்சிஎல்ஆர் விகிதம், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வங்கிகள் மாற்றியமைக்கின்றன.
தற்போதைய நிலவரம் என்ன?
ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் தற்போது 1.63% அதிகரித்து, 812 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 814.25 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 801.40 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 866.90 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 631 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் 1.41% அதிகரித்து, 810.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 814.30 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 801.25 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 866.60 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 631.10 ரூபாயாகும்.
Axis bank increases MCLR rate on loans: check latest rates here
Axis bank increases MCLR rate on loans: check latest rates here/ஆக்ஸிஸ் வங்கியின் அதிரடி முடிவு.. வாடிக்கையாளர்கள் கவலை.. இனி வட்டி அதிகரிக்குமே..!