ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குபகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்துள்ளதாக ஆப்கான் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 7 குழந்தைகள் உட்பட 14 படுகாயம் அடைந்துள்ளதாகவும், 4 பேர் வரை இறந்துள்ளதாகவும் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் ஷியா ஹசாரா சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அந்நாட்டில் சிறுபான்மையினராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் பிடித்த நிலையில் பயங்கரவாத தாக்குதல்கள் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.