ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதாக கூறிய ஆளும் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஜனநாயக முறையில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது தவறானது. வன்முறை சமூக அமைதியைத்தான் சீர்குலைக்குமே தவிர எதற்கும் தீர்வாக அமையாது.
மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதாக கூறிய ஆளும் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஜனநாயக முறையில் எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது தவறானது.(1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 19, 2022
எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இனி இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்வது தமிழக அரசின் பொறுப்பாகும்”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.