இது நம்ம பீஸ்ட்!|புத்தம் புது காப்பி |திரைக்கதை எழுத வாங்க!

தெரிஞ்ச பழைய கதை, தெரியாத புது திரைக்கதை. இதுதான் நம்ம ‘புத்தம் புது காப்பி’ தொடரின் ஐடியாவே.

இதுவரைக்கும் பழைய நீதி கதைகளை எடுத்து அதை ஒரு சுருக்கமான,சுவாரஸ்யமான திரைக்கதையாக எழுதிக்கொண்டிருந்த நான்…

இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா “சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்போ ரொம்ப பிரபலமா இருக்கிற பீஸ்ட்(Beast) சினிமாவோட அடிப்படைக் கதைய எடுத்துக்கிட்டு நாமலே ஏன் ஒரு சுருக்கமான திரைக்கதை பண்ண கூடாதுன்னு யோசிச்சேன்

ஆக… இந்த வாரம் பீஸ்ட் படத்தோட அடிப்படைக் கதைக்கு நாம ஒரு புது திரைக்கதை பாக்க போறோம். முடிஞ்சவரைக்கும் அதை சுவாரஸ்யமாகவும் அதே நேரத்தில் சுருக்கமாகவும் கொண்டு போக முயற்சி பண்ணி இருக்கேன். ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுக்கவும்.

பீஸ்ட் ட்ரைலரிலயே நமக்கு அதோட அடிப்படைக் கதை தெரிந்திருக்கும். ஒரு மால் ஹைஜேக் பண்ணப்படும்போது அதுக்குள்ள எக்ஸ் RAW ஏஜெண்ட் ஒருத்தன் எதேச்சையா மாட்டிக்கிட்டு இருந்தா, அதுக்கு அப்புறம் நடக்கிற சம்பவங்கள் எப்படி இருக்கும் அப்படிங்கற ஒரு அடிப்படைக் கதை மேலதான் ஒரிஜினல் பீஸ்ட்டோட திரைக்கதை கட்டமைக்கப்பட்டிருக்கும்.

சரி… இனி நம்ம திரைக்கதையை பார்ப்போம். ஏன்னா இது நம்ம பீஸ்ட்!

Beast

( திரைக்கதையை சுருக்கமாக்க பீஸ்ட் படத்தோட ஆரம்பகட்ட காட்சிகளை இங்கே நம்ம யூஸ் பண்ணிக்கலாம். ஆனால் எழுத்து வடிவில்…

வீரராகவன் ஒரு சீனியர் ஏஜென்ட் அவர் ஒரு மிஷன்காக தீவிரவாதிகளை பிடிக்க போகும்போது அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தினால் எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை இறந்து போயிடுது. அதனால உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர், அந்த வேலை வேண்டாம் என்று முடிவு பண்ணி, Quit பண்ணிட்டு வந்து சென்னையில் வாழ்ந்துட்டு இருக்காரு.)

காட்சி 1 (எமர்ஜென்சி கண்ட்ரோல் ரூம்)

(மினிஸ்டர் வேகமாக உள்ளே நுழைகிறார்)

அமைச்சர்: என்ன பண்ணிட்டு இருக்கீங்க. மாலை ஹைஜேக் பண்ணி 24 மணி நேரம் ஆச்சு. இன்னும் அவனுககிட்ட இருந்து எந்த தகவலும் வரல நீங்களும் எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியல.

மாதவ் சிங்: நீங்க சொல்றது கரெக்ட்டு தான் சார். அவங்ககிட்ட இருந்து இன்னும் எந்த தகவலும் வரல. நாங்கள் எடுத்த நடவடிக்கை எதுவும் உங்களுக்கு தெரியல. அதுக்காக நாங்க எடுக்காம இருக்கோம்னு அர்த்தம் இல்லை.

அமைச்சர்: அப்படி என்னதான்யா பண்ணி இருக்கீங்க.

மாதவ் சிங்: உள்ள நம்ம பையன் ஒருத்தன் இருக்கான், அவனை புடிச்சு அவன்கிட்ட நாங்க பேசிட்டோம்.

அமைச்சர்: என்னது ஒருத்தன புடிச்சு அவன்கிட்ட பேசிட்டீங்களா? அது போதுமா? இத சொல்றதுக்குதான் இத்தனை பேர் வந்து இங்க உக்காந்துட்டு இருக்கீங்களா?

மாதவ் சிங்: சார் நாம எவ்வளவு பேர் இருந்தாலும், இங்க உட்கார்ந்துகிட்டு ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா, அவன் ஒருத்தனா இருந்தாலும், அங்க இருந்துகிட்டு அவன் என்ன வேணாலும் பண்ண முடியும்.‌

அவன்கிட்ட நாங்க பேசிட்டோம் அவன் நம்மள வெயிட் பண்ண சொல்லி இருக்கான். அங்க என்ன நிலவரம்னு பார்த்துட்டு அவன் நம்மள contact பண்ணுவான். அதுக்கு ஏத்த மாதிரி அடுத்த மூவ் பிளான் பண்ணா ஓகே. இந்நேரம் அங்க அவன் தெறிக்க விட்டுட்டு இருப்பான்!

காட்சி 2 (ஈஸ்ட் கோஸ்ட் மால்)

(ஈஸ்ட் கோஸ்ட் மால் உள்ளே உள்ள ஈஸ்ட் கோஸ்ட் சினிமாஸில் ஒருத்தன் பாப்கார்ன எடுத்துக்கிட்டுப் போறான். திரையில எம்ஜிஆர் பாட்டு ஓடிக்கிட்டு இருக்கு. தியேட்டர்ல நம்ம ஹீரோ மட்டும் படம் பார்த்துட்டு இருக்கார்.

“மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்…” – பாடல்.

பாட்டை பாத்துகிட்டே அந்த பாப்கார்ன வாங்கறது வேற யாரும் இல்லை‌… நம்ம‌ வீரராகவன்தான்!

அப்படியே இரண்டு பாப்கான எடுத்து வாயில போட்டுட்டு மெல்லமா எந்திரிச்சு அந்த ஸ்கிரீன விட்டு வெளியே வராரு.

அவர்கூட ரெண்டு பேரு பின்னாடி வராங்க. பக்கத்து ஸ்கிரீன்ல இருந்து அவரோட Wife பூஜா‌ வெளிய வராங்க. அங்க மாகாளி, கிளி இன்னும் கொஞ்சம் அடியாட்கள் நின்னுட்டு இருக்காங்க.)

பூஜா: வீரா! எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு பயங்கரமா தலை வலிக்குது.

வீரா: மாகாளி ! இவளுக்கு என்ன படம் போட்டு விட்ட?

மாகாளி: நேத்து ரிலீஸ் ஆச்சில்லப்பா… அந்தப் படம்தான் போட்டுவிட்டேன்‌.

வீரா: இதுக்குதான் புதுப்படம் பார்த்தாலே தலை வலிதான். அதுக்குதான் நீ என்கூட பழைய படம் பார்க்க வான்னு சொன்னேன். நீ அதுக்கும் மாட்டேன்னு சொல்லிட்ட.

பூஜா: அது இல்ல! இது என்ன மால் ஹை-ஜாக்கிங் டிராமா? எதுக்கு இதெல்லாம் பண்ற. நேத்து காலையில ஷாப்பிங் போலாம் வான்னு கூப்பிட்ட. அதை நம்பி நான் வந்தேன். இங்க வந்து பார்த்தா திடீர்னு என்னன்னமோ பிளான் பண்ணி வச்சிருக்க.

வீரா: பூஜா! இந்த ஹை-ஜாக்கிங், டிராமா இல்ல நிஜம். ஆனா, எதுக்கு? ஏன்? இப்படி எந்த கேள்வியா இருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு எதுவும் என்னை கேட்காதே. சொல்றத மட்டும் செய். அதுக்கப்புறம் எல்லா பதிலும் நான் உனக்கு சொல்றேன்.

வீரா: மாகாளி! கீழ நிலைமை எப்படி இருக்கு? எல்லாம் நாம எதிர்பார்த்த மாதிரிதான போயிட்டு இருக்கு?

மாகாளி: ஒண்ணும் பிரச்னை இல்லபா! எல்லாம் எதிர்பார்த்த மாதிரி போயிட்டு இருக்கு. நம்மள தீவிரவாதினு எல்லாரும் நம்பிட்டாங்க. நீ அடுத்து கால் பண்ணா சரி.

பூஜா: இவனுங்கள எல்லாம் பார்த்தா தீவிரவாதி மாதிரியா தெரியுது. தொந்தியும் தொப்பையுமா!

மாகாளி: ஏன் தீவிரவாதி எல்லாம் சாப்பிட மாட்டானா? அவனுக்கு எல்லாம் தொப்பை வராதா?

வீரா: அதெல்லாம் சரி! முடிஞ்ச வரைக்கும் நீங்க யாரும் அவங்க முன்னாடி பேசாதீங்க. அப்புறம் நீங்க எல்லாம் நம்ம ஆளுங்கதான்னு அவங்களுக்கு தெரிஞ்சிடும். நான் இப்போ கண்ட்ரோல் ரூமுக்கு கால் பண்ண போறேன்.

Beast

காட்சி 3 (எமர்ஜென்சி கண்ட்ரோல் ரூம்)

(கண்ட்ரோல் ரூம் கால் ரிங் ஆகுது மாதவ் சிங் அதை எடுக்கிறார்.)

மாதவ் சிங்: சொல்லுங்க வீரா! அங்க நிலைமை எப்படி இருக்கு? நாம ஏதாவது ஆப்ரேஷன் பிளான் பண்ணலாமா?

வீரா: ஆப்ரேஷன் எதுவும் பிளான் பண்ண முடியும்னு எனக்கு தோணலை சார். இங்க ஒரு 25 பேருக்கும் மேல ஆயுதங்கள் வச்சிருக்கிற தீவிரவாதிகள் (heavily armed terrorists). அது போதாம மால் முழுக்க பாம் செட் பண்ணி இருக்காங்க போல. நானே இதுவரைக்கும் பத்து டெபியூஸ் பண்ணிட்டேன். ஆனா, இன்னும் நிறைய இங்க இருக்குன்னு நினைக்கிறேன். சோ நம்ம ஏதாவது பிளான் பண்ணா அது highly riskyஆதான் சார் இருக்கும்.

(வீரா மாகாளியை பார்த்து சிரித்துக்கொண்டே) அவனுங்ககிட்ட இருந்து ஏதாவது கால் வந்துச்சா ?

மாதவ் சிங்: ஒரு half-an-hour முன்னாடி அவங்ககிட்டிருந்து கால் வந்தது. Nothing surprising. 5 thousand crores டிமாண்ட் பண்றாங்க அதுவும் கிரிப்டோகரன்சி…

வீரா: இது ஒரு ரிஸ்க் அதிகமான ஆபரேஷன். எனக்கு இங்க இருக்கிற ஒவ்வொரு உயிரும் முக்கியம். கவர்மெண்ட் என்ன சொல்றாங்க ?

மாதவ் சிங்: நான் இன்னும் பேசல வீரா… உங்க ரிப்போர்ட்டுக்காகத்தான் நாங்க வெயிட் பண்ணிட்டு இருந்தோம்! இனிமேல்தான் பேசணும்.

வீரா: உங்களுக்கு ஓகேன்னா இப்பவே சொல்லுங்க… நான் ஆபரேஷன் ஸ்டார்ட் பண்றேன்.

மாதவ் சிங்: இல்ல வீரா ரிஸ்க் அதிகம்னா நான் மேலிடத்தில் இருக்கவங்ககூட பேசணும்.

வீரா: தெரியும்! இங்க எதுவும் மாறாதுனு. சரி பேசிட்டு சொல்லுங்க…

காட்சி 4: (எமர்ஜென்சி கண்ட்ரோல் ரூம்)

(மாதவ் சிங், மினிஸ்டர் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தை)

அதிகாரி 1: அவன் சொல்றத மட்டும் வைத்து தீவிரவாதிகளை ஓவரெஸ்டிமட் பண்ண கூடாது சார். அவன் ஒருத்தன்… அதனால அந்த தீவிரவாதிகள ஒண்ணும் பண்ண முடியாம இருக்கலாம். ஆனா நம்மளோட Force இறங்கினா எல்லாரையும் இப்படிங்கருதுக்குள்ள முடிச்சிடுவாங்க.

அதிகாரி 2: அதான! யாரோ ஒருத்தன் சொல்றதை வச்சுக்கிட்டு அவங்களுக்கு பயப்படனுமா?

மாதவ் சிங்: அவன் யாரோ ஒருத்தன் இல்ல சார்! நம்மளால ட்ரெயின் செய்யப்பட்டு களத்துல வேலை பார்த்த சீனியர் RAW ஏஜெண்ட். அவன் complete பண்ண மிஷன்ஸோட ஃபைல்ஸ் எல்லாம் எடுத்துப் பாருங்க, அப்ப தெரியும் அவனால எஸ்டிமேட் பண்ண முடியுமா முடியாதானு. அப்படிப்பட்ட ஒருத்தனே ரிஸ்க் அப்படின்னு சொல்றான்னா, அவனுங்க எவ்ளோ ஆபத்தானவங்களா இருப்பானுங்க. அதுதான் நான் இவ்ளோ யோசிக்கிறேன்.

Beast

காட்சி 5: (ஈஸ்ட் கோஸ்ட் மால்)

(பணயக் கைதிகளில் ஒரு ஆள் கை தூக்குகிறான்)

கிளி: யோவ் என்னய்யா மறுபடி பாத்ரூமா ? நீ என்னய்யா ஸ்கூல் பையன் மாதிரி அடிக்கடி போயிட்டு இருக்குற.

அந்த ஆள்: சுகர் பேஷண்ட் தம்பி

கிளி: சுகர் பேசன்ட்டா? நம்ம இனமா நீ! சரி சரி போ…

பணயக் கைதி 2: தீவிரவாதி சாருக்கு சுகரா ?

கிளி: ஏன் தீவிரவாதிக்கு சுகர் வராதா? உங்கள மாதிரி ஆளுங்கள அடிக்கடி மேய்க்கிறதுலயே அவனுக்கு சுகர் பிரஸர் எல்லாமே சொல்லாம கொள்ளாம வந்துரும்யா!

பணயக் கைதி 2: என்ன வேற யாரோயோ சொல்ற மாதிரியே சொல்றீங்களே.

கிளி: இல்ல அப்படிதான் எங்களுக்கு வந்துச்சுன்னு சொன்னேன்.

காட்சி 6

மினிஸ்டர்: யோ இந்த மாதிரி ஹை ரிஸ்க்னா அதையே செய்யணும்னு ஏன் அடம் பிடிக்கிறீங்க. பேசாம கவர்மெண்ட்கிட்ட பேசி நான் பணத்தை வாங்கி தரேன். அதை கொடுத்துட்டு இருக்கிறவங்கள எல்லாம் காப்பாத்துற வழிய பாருங்க. என் பொண்டாட்டி புள்ள கூட உள்ளதான் மாட்டிகிட்டு இருக்காங்க… அதை மறந்துடாதீங்க.

(எல்லோரும் அமைதியாகி விட்டார்கள்)

காட்சி 7 (ஈஸ்ட் கோஸ்ட் மால்)

(மாதவ் சிங் வீராவுக்கு போன் செய்கிறார்.)

மாதவ் சிங்: வீரா ! ரிஸ்க் அதிகமா இருக்கு அதனால ஆபரேஷன் எதுவும் வேண்டாம்.

வீரா: ஏன்? மினிஸ்டரோட பொண்ணும் பொண்டாட்டியும் இங்க மாட்டிக்கிட்டு இருக்காங்க அதனாலதான?!

மாதவ் சிங் : வீரா ! You know the system here. கவர்மெண்ட் பணம் கொடுக்க ரெடி. அது அவங்களோட கிரிப்டோகரன்சி accountக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கிரெடிட் ஆயிடும். அவனுக எல்லாம் கிளம்பறதுக்கு தேவையான ஜெட்டும், அவனுக கேட்ட மாதிரி மாலோட மொட்டை மாடியில வந்து நின்னுடும். நீ பண்ண வேண்டிய தெல்லாம் ஹாஸ்டேஜஸ பத்திரமா வெளிய கூட்டிட்டு வா. Strictly No for risky moves.

வீரா : ம்ம்.. பார்க்கலாம்

(வீரா போனை கட் செய்கிறார்)

மாகாளி: அப்புறம் என்னப்பா கேட்ட பணமும் அக்கவுண்ட்க்கு வந்துடுங்கறாங்க. ஜெட் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்னு சொல்றாங்க. நம்ம எல்லாரும் ஜெட்ல ஏறி கிளம்பிரலாம்!

வீரா: ஜெட்ல ஏத்தி வழியனுப்பி வைக்கிறதுக்கு அவன் ஒண்ணும் உன் மாமா மச்சான் இல்லை. இந்தியன் ஆர்மி. நீ 500 மீட்டர் தாண்டறதுக்குள்ளயே உன்னை சுட்டு சுக்குநூறாக்கிடுவான்.

மாகாளி: என்னப்பா வீரா ! ஆசை காட்டி கூட்டிட்டு வந்துட்டு, இப்படி நீயே பயமுறுத்துறியே.

வீரா: மாகாளி ! என்னை நம்பனவங்கள நான் கைவிட்டதா சரித்திரமே இல்லை.

காட்சி 8 (ஈஸ்ட் கோஸ்ட் மால்)

வீரா: பூஜா இப்ப நேரா நீ கீழ ஓடி போய் கோஸ்டேஜஸ் எல்லாத்தையும் கூப்பிட்டு வெளியே கிளம்பு.

பூஜா: அப்ப நீங்க எல்லாம்

வீரா: நீ போ… நாங்க கண்டிப்பா வந்துருவோம்.

(பூஜா நேரா ஹாஸ்டேஜஸ்கிட்ட ஓடிப் போய்…)

பூஜா: எல்லாரும் வாங்க வெளியே ஓடிரலாம்… தீவிரவாதிக எல்லாம் அவங்க ஜெட்டுக்கு கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

(உடனே எல்லாரும் வெளியே ஓடுறாங்க. எல்லாரும் வெளிய போயி முடிச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துல மால் மொத்தமா வெடிச்சுருச்சு. பூஜாவோ அதிர்ச்சியில்…)

காட்சி 9 (வீரராகவனின் கிராமத்து பண்ணை வீடு)

சில மாதங்களுக்குப் பிறகு…

(மாதவ் சிங், வீராவை பார்ப்பதற்காகக் காத்திருக்கிறார். வீரா அவர் முன் இரண்டு தேநீர்க் கோப்பைகளுடன் வந்து அமர்கிறான்)

மாதவ் சிங்: என்ன வீரா! கிராமத்திலேயே வந்து செட்டில் ஆயிட்டீங்க போல… இதுதான் இப்ப டிரெண்டா?

வீரா: டிரெண்டெல்லாம் இல்ல சார். இங்க எங்களுக்கு வருமானம் குறைவு, தேவைகளும் குறைவு. ஆனால், நிம்மதி அதிகம் அதனாலதான். நீங்க இங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க?

மாதவ் சிங்: அந்த மால் ஹைஜாக் incidentக்கு அப்புறம் நீங்க கொடுத்த ஃபைனல் ரிப்போர்ட் ஞாபகம் இருக்கா?

வீரா: இருக்கே… தீவிரவாதிகள் எஸ்கேப் ஆக ட்ரை பண்ணும்போது நான் அவங்கள அரஸ்ட் பண்ண முயற்சி பண்ணப்ப நடந்த சண்டையில ஒருத்தன் பாம ஆக்டிவேட் பண்ணிட்டான். அதிலிருந்து நான் தப்பித்து வரவே பெரிய போராட்டம் ஆயிடுச்சு. கடைசியாக பாம defuse பண்ணவும் முடியல… தீவிரவாதிகளையும் உயிரோட பிடிக்க முடியல.

மாதவ் சிங்: கரெக்ட்! அந்த மால் ஹைஜாக் சம்பவத்தில எனக்கு பல கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கு வீரா. அது கூட இந்த ரெண்டு வாரத்துல இன்னும் நிறைய கேள்விகள் சேர்ந்திருக்கு.

Point 1: ஒன் மேன் ஆர்மினு எல்லாம் மிஷன் ரிப்போர்ட்ஸ்லயும் எழுதப்பட்டு இருக்கிற வீரராகவனால வெறும் 25 தீவிரவாதிகள ஒண்ணும் பண்ண முடியலயா?

Point 2: வெடித்து சிதறுன மால்ல இருந்து 25 தீவிரவாதிகளோட அடையாளப்படுத்த முடியாத உடம்ப நாங்க எடுத்தோம். அந்த சம்பவத்துக்கு இரண்டு நாள் முன்னால சென்னைலயும் இங்க உங்க சொந்த ஊர்லயும் கிட்டத்தட்ட 25 மேன் மிஸ்ஸிங் கேசஸ் ஃபைல் ஆகி இருக்கு. எல்லாருமே விஐபிகளோட புள்ளைங்க. இது ரெண்டுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமா?

Point 3: திடீர்னு உங்க ஊர்ல இருக்கிற நல்லறம் அறக்கட்டளைக்கு வெளிநாடுகள்ல இருந்து நன்கொடைகள் பெருகி இருக்கு. அத வச்சு இங்க நிறைய நலத்திட்ட பணிகள் நடந்துகிட்டு இருக்கு. What a change over!

Point 4: இது கொஞ்சம் important. உங்க வைஃப் பூஜா சென்னை கார்ப்பரேஷன்ல அதிகாரியா வேலை பாத்துட்டு இருந்தாங்க இல்லையா ?

வீரா: ஆமா

மாதவ் சிங்: அந்த ஈஸ்ட் கோஸ்ட் மால் கட்டிட அப்ருவல் பிரச்னைல, அவங்க லஞ்சம் கேட்டாங்கனு சொல்லிதான அவங்கள‌ டிஸ்மிஸ் பண்ணாங்க. அந்த மால் இப்போ இல்லை!

(வீரா முறைக்கிறார் )

மாதவ் சிங்: எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் இது எல்லாத்தையும் கோ-இன்சிடன்ஸ்னு என்னால நம்ப முடியல. ஏதோ சில ரகசியங்கள் இதுல இருக்கு. Something fishy. எப்படியும் உங்களுக்கு எதிரா என்கிட்ட arguments மட்டும்தான் இருக்கு. evidences இல்ல. ஆனா, ஒண்ணு உங்களுக்குச் சொல்லிக்க விரும்பறேன். இனிமே எந்த Hijackலயும் எந்த மேன் மிஸ்ஸிங் லயும் எதேச்சையா கூட வீரா சம்பந்தப்பட வேண்டாம் அப்படின்னு நான் நினைக்கிறேன்.

வீரா: எவிடன்சஸ்… (ஓரு புன்னகை) அது ரொம்ப முக்கியமானது மாதவ் சிங். உண்மைய பொய்யாக்கும் பொய்ய உண்மையாக்கும். உங்களுக்கு இது வெறும் ஸ்டேட்மெண்ட். ஆனா‌, நான் இத ரத்தமும் சதையுமாக பல இடங்கள்ல பார்த்திருக்கேன்.

அப்புறம் நீங்க சொன்ன இந்த Hijack, மேன் மிஸ்சிங் கேசஸ்… இனிமேல் நடக்கலாம் நடக்காமயும் போகலாம். அது எனக்கு தெரியாது. ஆனா, அங்க எதேச்சையா வீரராகவன் சம்பந்தப்படுறதும் சம்பந்தப்படாததும் என் கையில இல்ல என்ன சுத்தி இருக்கிற சொசைட்டி கையில இருக்கு!

மிஷன் பீஸ்ட் continues…

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.