உக்ரைன் படைகள் சரணடைவதற்கு ரஷ்யா இரண்டு மணி நேரம் கெடு விதித்துள்ளது.
மரியூபோலில் உள்ள Azovstal ஸ்டீல் மில்லில் இருக்கும் உக்ரைன் படைகளும் வெளிநாட்டுப் படைகளும், ரஷ்ய நேரப்படி, இன்று 14.00 மணியிலிருந்து 16.00 மணிக்குள் சரணடைய, ரஷ்யா கெடு விதித்துள்ளது.
ரஷ்யத் தளபதியான Colonel General Mikhail Mizintsev என்பவர், உயிர் வாழ விருப்பம் இருந்தால், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் சரணடையுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால், மரியூபோல் நகரை ஏழு வாரங்களாக பாதுகாத்து வரும் உக்ரைன் வீரர்கள், இதற்கு முன் இதேபோல் விடுக்கப்பட்ட எந்த எச்சரிக்கைகளையும் மதிக்காத நிலையில், இன்று கூடுதலாக, கிழக்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தோல்வியடையும் என்று கூறியுள்ளார்கள்.
ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் படைகளை மீறி முன்னேறும் வலிமை இல்லை என்று கூறி, ரஷ்யாவின் கெடுவை நிராகரித்துள்ளார்கள் அவர்கள்.