கொழும்பின் நகர மண்டபத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இன்றைய தினம் படையெடுத்துள்ளனர்.
மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணியே இவ்வாறு கொழும்பை நோக்கி வருகிறது.
மொறட்டுவையிலிருந்து கொழும்பு நகர மண்டபம் வரை இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போது காணப்படும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடித்து, மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவோம் என்ற அடிப்படிடையில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.