இருட்டில் வாழும் பாகிஸ்தான் மக்கள்..முதல் பாலில் ஆவுட் ஆன ஷெபாஸ் ஷெரீப்..கடும் மின்சார தட்டுப்பாடு.!

இலங்கைக்கு நிகராகப் பாகிஸ்தானும் அதிகப்படியான நெருக்கடியில் உள்ளது. ஒருபக்கம் மக்கள் ஆட்சி மாற்றம் நடந்த உடன் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என எதிர்பார்த்து இருந்த வேளையில் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றியுள்ள ஷெபாஸ் ஷெரீப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

5% ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரம் முடிவுக்கு வருகிறதா.. வரி அதிகரிக்க போகிறதா.. அரசின் திட்டம்?

ஷெபாஸ் ஷெரீப் எடுத்த முக்கிய முடிவால் அந்நாட்டின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சுமார் 30 பில்லியன் டாலர் சுமை உருவாகியிருக்கும் நிலையில், தற்போது மக்கள் இருட்டில் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

 பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஏற்கனவே அதிகப்படியான நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், உக்ரைன் போர் மூலம் சப்ளை செயின், உற்பத்தி ஆகியவற்றில் ஏற்பட்ட விலை பிரச்சனையின் காரணமாக எரிபொருள், எரிவாயு விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

மின்சார உற்பத்தி

மின்சார உற்பத்தி

இந்த நிலையில் மின்சார உற்பத்தி தளத்தை இயக்க தேவையான நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவை வெளிநாட்டில் இருந்து வாங்குவதற்குக் கூடப் பணம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது பாகிஸ்தான். இதனால் கடந்த 6 மாதத்தில் அடுத்தடுத்து பல மின்சார உற்பத்தி தளங்கள் மூடப்பட்டு உள்ளது.

மின்சார உற்பத்தி தளம்
 

மின்சார உற்பத்தி தளம்

இந்நிலையில் பாகிஸ்தான் அரசியல் அதிகாரியும், புதிய நிதியமைச்சர் என ஷெபாஸ் ஷெரீப்-ல் அறிவிக்கப்பட்டு உள்ள மிஃப்தா இஸ்மாயில் வெளியிட்டுள்ள டிவீட்டில் சுமார் 3535 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் தளத்தை எரிபொருள் இல்லாத காரணத்தால் மூடப்பட்டு உள்ளது. இதேபோல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3605 மெகாவாட் மின்சார உற்பத்தி தளம் முடக்கப்பட்டு உள்ளது.

இம்ரான் கான்

இம்ரான் கான்

ஏப்ரல் 13ஆம் தேதி நிலவரத்தின் பாகிஸ்தான் நாட்டின் 7140 மெகாவாட் மின்சார உற்பத்தி தளம் மூடப்பட்டு உள்ளது. இதற்கு இம்ரான் கான் அரசின் திறமையின்மை காரணமாஅல்லது ஊழல் காரணமா அல்லது இரண்டும் காரணமா என டிவீட் செய்துள்ளார்.

6000 மெகாவாட் மின்சாரம் தட்டப்பாடு

6000 மெகாவாட் மின்சாரம் தட்டப்பாடு

பாகிஸ்தான் நாட்டிற்குச் சுமார் 21500 மெகாவாட் மின்சாரம் தேவையாக இருக்கும் நிலையில், 15500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் சுமார் 6000 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டு அந்நாட்டின் பல பகுதிகளில் மக்கள் இருட்டில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pakistan people lives in darkness; machines, lights, fan were turn off amid power shortage

Pakistan people lives in darkness; machines, lights, fan were turn off amid power shortage இருட்டில் வாழும் பாகிஸ்தான் மக்கள்.. முதல் பாலில் ஆவுட் ஆன ஷெபாஸ் ஷெரீப்.. கடும் மின்சாரத் தட்டுப்பாடு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.