இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு என இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசால் நடத்தப்படும் பெட்ரோலிய நிறுவனத்தின் புதிய விலையான 92 ஒக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84 உயர்ந்து, ரூ.338க்கு விற்கப்படுகிறது.
இது கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலையை மேலும் உயர்த்தியுள்ளதால் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்..
திரிபுராவிலும் பன்றிக்காய்ச்சல் – நோய் பாதிக்கப்பட்ட அனைத்து பன்றிகளையும் கொலை செய்ய உத்தரவு