சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். டி வெங்கடேஸ்வரன் கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை புதுடெல்லிக்கு விஜயம் செய்து, இந்திய அரச அதிகாரிகள் மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதன் போது இவர், வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மற்றும் இணைச் செயலாளருமான அரிந்தம் பாக்சியை செய்தித் தொடர்பாளர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுமுகமான உறவுகள் குறித்தும், இலங்கைக்கான இந்திய முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்தும் ,இலங்கையிலிருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதிகளை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
K.Sayanthiny