இலங்கைக்கான நிதி உதவிகளை துரிதமாக வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவுடன் இன்று செவ்வாய்கிழமை வொஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு இலங்கைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை இலங்கை எதிர்கொண்டுள்ள கடினமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகள் குறித்தும் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவிற்கு , நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டதற்கமைய , சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் இலங்கையுடன் தீவிரமாக ஒன்றித்து செயற்படும் என்று அதன் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியா உறுதியளித்துள்ளார்.
இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இந்திய அரசு சார்பில் உதவும் ஒருவராக இருப்பார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.