உக்ரைனில் பெண்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு விளாடிமிர் புடின் வெகுமதி வழங்கியதற்கு ஏன் உலகளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்படவில்லை என எம்.பி காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 55-வது நாளை தொட்டுள்ளது.
அதன்படி இரண்டாம் கட்டப்போரை ரஷ்யா தொடங்கியுள்ளது, அதாவது உக்ரைனின் கிழக்கு பகுதியான டான்பாஸில் ரஷ்ய ராணுவங்கள் மீண்டும் புதிய தாக்குதலை திங்கள்கிழமை முதல் முன்னெடுத்து இருக்கும் நிலையில் “டான்பாஸ் போர்” தொடங்கிவிட்டது என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புச்சா நகரில் சமீபத்தில் உக்ரைன் வீரர்கள் நடத்திய தாக்குதலில் 400க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதில் பல பெண்கள் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர், இதோடு அங்கிருந்து ரஷ்ய வீரர்கள் வெளியேறுவதற்கு முன்னர் வீடுகளில் உள்ள பல பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இந்நிலையில் புச்சா தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்களுக்கு புடின் விருதுகள் மற்றும் வெகுமதியை வாரி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக உக்ரேனிய எம்.பி லிசியா வசிலிங்கோ வெளியிட்ட சமூகவலைதள பதிவில், புச்சாவில் சண்டையிட்ட வீரர்களுக்கு புடின் பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கியிருக்கிறார்.
அங்கு துஷ்பிரயோகம் செய்தவர்கள், குழந்தைகளை கொன்றவர்கள், கொள்ளையடித்தவர்களுக்கு வெகுமதி வழங்கியுள்ளார்.
அதாவது போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெகுமதியை புடின் வழங்கியிருக்கிறார்.
இதை உலகளவில் கண்டிப்பதற்கு பதிலாக உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகளை இனப்படுகொலை என்று அழைப்பது சரியா அல்லது தவறா என விவாதம் தான் நடக்கிறது என தெரிவித்துள்ளார்.