இக்கட்டான சூழ்நிலையில் அண்டை நாட்டை தனித்து விடமுடியாது மற்றும் உக்ரைனின் போராட்டக் குணத்தை பிற நாடுகளையும் ஆதரிக்குமாறு கேட்டு கொள்கிறேன் என போலந்து பிரதமர் Mateusz Morawiecki தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்திவரும் தாக்குதலால் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி இருப்பிடத்திற்காக மக்கள் தவித்து வரும் நிலையில், அந்த நாட்டின் மேற்கு எல்லை நகரான லிவிவ்-வில் அவர்களுக்கான தற்காலிக தங்கும் இடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய போலந்து பிரதமர் Mateusz Morawiecki உக்ரைனிய ராணுவப்படை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதில், தொடர்ந்து பேசிய போலந்து பிரதமர் ரஷ்யாவுடனான போரில் உக்ரைனின் பலவீனமானவர்களை ஆதரிப்பதன் மூலம் உக்ரைனின் போராடும் குணத்தை நாம் ஆதரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இன்று நான் இங்கு பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்க்கிறேன், ஏனென்றால் உக்ரைனிய ஆண்கள் அவர்களது தாய் நாட்டை பாதுகாப்பதற்காகவும், நம்மை பாதுகாப்பதற்காகவும் போராடி வருகின்றனர்.
மேலும் உக்ரைனிய படைகள் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக போராடி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
புச்சா படுகொலை…ராணுவ வீரர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவித்த புடின்!
உக்ரைனில் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி தவித்து வரும் 5000 மக்களுக்காக உக்ரைன் மற்றும் போலந்து நாட்டு அரசாங்கங்கள் இணைந்து தற்காலிக தங்கும் கப்பல் கொள்கலனகளை லிவிவ்-வில் அமைத்துள்ளனர்.