உக்ரைன் தாக்கி மூழ்கடித்த மாஸ்க்வா கப்பலிலிருந்த எங்கள் மகன்கள் எங்கே என அந்தக் கப்பலில் பணியாற்றியவர்களின் பெற்றோர் புடினிடம் கோபக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
வலிமையான நாடாகத் திகழ்ந்த ரஷ்யா, ஒரு சிறிய நாடான உக்ரைனை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. தொடர்ந்து தன் படைத் தளபதிகள், வீரர்கள், போர் வாகனங்கள் என இழந்து வரும் ரஷ்யாவுக்கு மற்றொரு பெரிய அடியாகவும் அவமானமாகவும் அமைந்துள்ளது ரஷ்யாவின் கௌரவமாக கருதப்பட்ட மாஸ்க்வா (Moskva) கப்பலை உக்ரைன் தாக்கி மூழ்கடித்துள்ள விடயம்.
அந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டதே உக்ரைனில்தான். ஆக, அதைக் கூறித்து முழுமையாக அறிந்திருந்த உக்ரைன், அதை எங்கே அடித்தால் அது எப்படி விழும் என்பதை சரியாக கணித்து, தாக்கி வீழ்த்தி மூழ்கடித்தது.
அந்தக் கப்பலில் 514 பேர் இருந்துள்ளார்கள். முதலில் அந்தக் கப்பல் உக்ரைனால் தாக்கி அழைக்கப்பட்டது என்ற விடயத்தையே ஒப்புக்கொள்ள மறுக்கு ரஷ்யா, கப்பலில் தீப்பற்றியதால் கப்பல் வெடித்து மூழ்கி விட்டதாக கதை விட்டு வருகிறது. அத்துடன், கப்பலில் பயணித்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
அத்துடன், அந்தக் கப்பலில் இருந்த பணியாளர்கள் எல்லாரும் உயிருடன் இருப்பதைப் போல காட்டும் போலி வீடியோக்களையும் வெளியிட்டு உலகை ஏமாற்ற முயன்று வருகிறது ரஷ்யா.
ஆனால், இவ்வளவு நாட்களும் புடின் விட்ட கதைகளை நம்பிய ரஷ்ய மக்கள், இப்போது அவரையே எதிர்த்துக் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளார்கள்.
மாஸ்க்வா கப்பலில் செஃப் ஆகப் பணியாற்றிய Egor என்னும் இளைஞரின் தாயாகிய Irina Shkrebets என்பவர், மூழ்கிய கப்பலிலிருந்து மீட்கப்பட்டு தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் நடுவே தன் மகனைச் சென்று தேடியிருக்கிறார். அங்கே Egor இல்லை!
கப்பலில் 500க்கு அதிகமானோர் இருந்தார்கள். இங்கே மருத்துவமனைகளில் 200 பேர்தான் இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் எங்கே என கடற்படைத் தளபதி ஒருவரை Irina கேட்க, அவரோ, நான் உனக்கு எதையும் சொல்லமாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
Egorஇன் தந்தையான Dmitry, தன் மகன் அந்தக் கப்பலில் பணிக்கு சேர்க்கப்பட்ட ஒரு பயிற்சி பெறும் நபர்தான். அவரை போர் நடக்கும் இடத்துக்கே அனுப்பியிருக்கக்கூடாது என்கிறார்.
அந்தக் கப்பலின் தளபதியை நேருக்கு நேராக சந்தித்த Dmitry, போர் வீரர்களாகிய நீங்கள் எல்லாரும் உயிரோடு இருக்கிறீர்கள், பயிற்சி பெறும் நபரான என் மகன் மட்டும் ஏன் இறந்தான் என கேள்வி கேட்டிருக்கிறார்.
அத்துடன் பிள்ளைகளை இழந்தவர்கள், தன்னைப்போல தைரியமிருந்தால் இந்த செய்தியை பரப்புங்கள் என்றும் அவர் ரஷ்ய மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆக, ரஷ்ய மக்கள் அதிகாரத்தைக் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளது மட்டும் நன்றாகப் புரிகிறது. ஆனால், தங்களைப் போலவே பிள்ளைகளை இழந்த உக்ரைன் மக்களின் துயரம் மட்டும் அவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பதுதான் நமக்குப் புரியவில்லை!