உக்ரைன் -ரஷ்யா இடையிலான 2-வது கட்ட போர் ஆரம்பமாகி உள்ளதாக உக்ரைன் அதிபரின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தலைமை அதிகாரி Andriy Yermak கூறினார். உக்ரைன் ராணுவத்தை நம்புமாறும், படை வலிமையுடன் இருப்பதாகவும், ரஷ்யப் படைகளின் தாக்குதலை தடுத்து உக்ரைன் படைகள் சமாளிக்கும் என்றும் நாட்டு மக்களுக்கு Andriy Yermak உறுதியளித்தார்.
இதனிடையே கிழக்கு Donetsk பகுதியில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குத்லில் 4 பேர் உயிரிழந்ததாக அம்மாகாண ஆளுநர் தெரிவித்தார். இந்த நிலையில் கிழக்கில் உள்ள Kreminna நகரத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.