உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: மாநகராட்சி தேர்தலுக்கு சிக்கல்| Dinamalar

பெங்களூரு, : பெங்களூரு மாநகராட்சி தேர்தல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவால் ஒரு ஆண்டுக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூரு மாநகராட்சி பதவி காலம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

தேர்தல் நடத்தப்படாததால் மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். பெங்களூரு மாநகராட்சிக்கு தனி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.தற்போது உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்து 243 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இறுதி வடிவம் அந்த குழு, வார்டு மறுவரையறை பணிகளை நிறைவு செய்துள்ளன. வார்டு மறுவரையறை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா ஈடுபட்டுள்ளார்.இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால் சில அளவுகோலை பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தற்போதைய நிலையில் மாநகராட்சி தேர்தலை நடத்தினால் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாத நிலை உள்ளது.மேலும் வார்டு மறுவரையறை பணிகள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஜூனில் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்க உள்ளது.

இச்சூழ்நிலையில் பெங்களூரு மாநகராட்சிக்கு, தற்போது தேர்தல் நடத்தும் மனநிலையில் அரசு இல்லை என்றே சொல்லப்படுகிறது.பெங்களூரு நகரை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும், மாநகராட்சி தேர்தல் நடத்த விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியானால் மீண்டும் ஒருமுறை வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற வேண்டும்.

அதனால் பெங்களூரு மாநகராட்சிக்கு தற்போது தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் முடிவடைந்த பிறகே பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மாநகராட்சி தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டும்.அதுவரை மாநகராட்சியில் அதிகாரிகளின் ஆட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.