நீலகிரி மாவட்டம் உதகையில் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள் அங்கிருந்த பூஜை பொருட்களை நாசம் செய்தன.
நேற்று காலை மூன்று மணியளவில் உதகை தலைகுந்தா பகவான் கோவிலில் கதவை கதவை உடைத்து கோவிலுக்குள் புகுந்த 2 கரடிகள் பூஜைப் பொருட்களான நெய், எண்ணை, தேன், வாழைப்பழம் போன்ற அங்கிருந்த அனைத்து பூஜை பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளன.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கரடியை பிடிப்பதற்கு வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.