சென்னையில், உலகின் பல முன்னணி நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்து வரும் நிலையில் நுகர்வோர் நுண்ணறிவு வணிக நிறுவனமான NielsenIQ திங்களன்று சென்னையில் தனது உலகின் மிகப்பெரிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு!
இந்தப் பிரம்மாண்ட அலுவலகத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விர்ச்சுவல் முறையில் திறந்து வைத்தார். சமீபத்தில் இந்தியாவின் 2வது பெரிய அமேசான் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் தனது துபாய் பயணத்தை முடித்த கையோடு நேரில் சென்று திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
நீல்சன்ஐக்யூ
நீல்சன்ஐக்யூ உலகில் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் வேளையில் அதன் உலகளாவிய செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப மையத்தைச் சென்னையில் மிகப்பெரிய அலுவலகத்துடன் அமைந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
2,000 ஊழியர்கள்
சென்னையில் அமைக்கப்படும் இந்தப் பிரம்மாண்ட அலுவலகத்தில் சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்றக் கூடிய மையமாக, நீல்சன்ஐக்யூ இந்தியாவில் முதல் அலுவலகத்தை அமைத்துள்ளது. மேலும் இதுதான் நீல்சன்ஐக்யூ-வின் மிகப்பெரிய அலுவலகமாகும்.
6 அலுவலகம்
சென்னையில் உள்ள இப்புதிய அலுவலகம் அதன் ஆறு அலுவலகங்களில் ஒன்றாகும், மேலும் இந்தியாவில் இந்நிறுவனம் இந்த வார இறுதியில் வதோதரா மற்றும் புனேவில் புதிய அலுவலகத்தையும் திறக்க உள்ளது. மற்ற மூன்று அலுவலகங்கள் போலந்து, மலேசியா மற்றும் மெக்சிகோ நகரங்களில் உள்ளது.
சந்தை தரவுகள்
உலகளாவிய நுகர்வோர் தரவு தளமான நீல்சென்ஐக், ரீடைல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சந்தை குறித்து முக்கியமான முடிவுகளை எடுக்கப் பல கோணங்களில் முக்கியமான தரவுகளை அளிக்கிறது. நீல்சென்ஐக் இந்தியாவில் மட்டும் அல்லாமல் சுமார் 100 நாடுகளில் வர்த்தகத்தையும், சந்தை தரவுகளையும் கொண்டு உள்ளது.
5000 ஊழியர்கள்
இந்தியாவில் சென்னை உட்பட அமைக்கப்படும் 3 அலுவலகத்தில் சுமார் 5000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதை அடுத்த 15 மாதத்தில் செய்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளது நீல்சென்ஐக் நிர்வாகம்.
Tamil Nadu CM MK Stalin opens NielsenIQ’s largest office in Chennai; inaugurated virtually
NielsenIQ opens its largest office in Chennai; Tamil Nadu CM MK Stalin inaugurated virtually உலகின் மிகப்பெரிய அலுவலகத்தைச் சென்னையில் திறந்த நீல்சன்..!!