உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது.  கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாலை நம்பியே இருக்கிறது. இந்தியா ஆண்டுக்கு 8.5 கோடி ரூபாய்க்கு பால் உற்பத்தி செய்கிறது. இதனை பெரிய பொருளாதார வல்லுநர்கள் உள்பட பலர் கவனம் செலுத்தவில்லை.

கிராமங்களின் பரவலாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. கோதுமை மற்றும் அரசியின் விற்பனை கூட ரூ.8.5 லட்சம் கோடிக்கு சமமாக இல்லை. பால் துறையின் மிகப்பெரிய பயனாளிகளாக சிறு விவசாயிகள் உள்ளனர்.

புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் டெய்ரியின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை ஆகியவை உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இப்பகுதியில் கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இதையும் படியுங்கள்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.