ஊழலில் சிக்கிய லலித் மோடி வாழ்க்கை சினிமா ஆகிறது
பிரபல விளையாட்டு பத்திரிகையாளர் போரிய மஜும்தார் லலித் மோடியின் வாழ்க்கை கதையை 'மாவாரிக் கமிஷனர் தி ஐபிஎல் லலித்மோடி சாஹா' என்ற பெயரில் புத்தகமாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
இந்த புத்தகத்தை தழுவி லலித்மோடியின் வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்கப்போவதாக பிரபல தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி அறிவித்துள்ளார். இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி, என்டிஆரின் வாழ்க்கை கதையான என்டிஆர் கதாநாயகுடு, இந்திய கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற கதையான 83 படங்களை தயாரித்தவர்.
லலித் மோடி இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவராக இருந்தார். இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் துணை தலைவராக இருந்தார். இவர் தான் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் அறிமுகபடுத்தி அதன் தலைவராகவும் இருந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் 460 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கிரிக்கெட் சம்மேளனத்தில் இருந்து நீக்கப்பட்டார். இவர் மீது குற்றப் பரிவு போலீசார் வழக்கு தொடர்ந்து கைது செய்ய இருந்த நேரத்தில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய லலித்மோடி தற்போது இங்கிலாந்தில் சொகுசாக வாழ்ந்து வருகிறார்.