குளிர் காலத்தில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா தொற்று பரவியது. இந்தத் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில், சீனா, ஆஸ்திரியா,
நெதர்லாந்து
உள்ளிட்ட ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரவிருக்கும் குளிர் காலத்தில், நாட்டில் 1 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அவை, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
‘ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு’- ஆய்வில் ஷாக் நியூஸ்!
குளிர்காலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவற்றை கடைபிடிக்கும்படி பொது மக்களிடம் வலியுறுத்துவது சிரமமாக இருக்கும். கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் நிலைமக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி நெதர்லாந்து நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் வரை குளிர் காலம் என்பது குறிப்பிடத்தக்கது.