தொலைத் தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஏர்டெல் நிறுவனம், அதன் 4 போஸ்ட் பெய்டு திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது.
இந்த திருத்தத்தின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் முன்பை விட குறைவான நன்மைகளைப் பெறுவார்கள்.
ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?!
ஏர்டெல்லின் இந்த மாற்றத்தினால் முன்பு கிடைத்த சலுகைகள் குறையுமா? வேறு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
எந்தெந்த திட்டங்களில் மாற்றம்
ஏர்டெல்லின் போஸ்ட் பெய்டு திட்டமான 499 ரூபாய் திட்டம், 999 ரூபாய் திட்டம், 1199 ரூபாய் மற்றும் 1599 ரூபாய் திட்டங்களில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஏர்டெல் திட்டங்களில் கிடைத்த அமேசான் பிரைம் சந்தா காலத்தினை நிறுவனம் குறைத்துள்ளது. இது முன்னதாக 1 வருடம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மெம்பர்ஷிப்பினை 6 மாதமாக குறைத்துள்ளது.
ரூ.499 திட்டம்
ஏர்டெல்லின் 499 ரூபாய் திட்டத்தில் அன்லிமிடெட் கால் சேவையும், இதில் 75 ஜிபி டேட்டாவும், தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், அமேசான் பிரைம் சேவையானது 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, ஷா அகாடமி லைஃப்டைம் சந்தா, விங்க்பிரீமியம் உள்ளிட்ட பிற சேவைகளும் கிடைக்கும்.
ரூ.999 திட்டம்
ஏர்டெல்லின் 999 ரூபாய் திட்டத்தில் அன்லிமிடெட் கால் சேவையும் கிடைக்கும். இதில் மாதம் 100 ஜிபி டேட்டாவும், தினசரி 100 எஸ் எம் எஸ், 6 மாதத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவையும், ஷா அகாடாமி லைஃப்டைம் சந்தா மற்றும் விங்க் பிரீமியம் உள்ளிட்ட பல சேவைகளுடன் வருகின்றது. இது ரெகுலர் வாய்ஸ் சேவைகளுக்கு மத்தியில் 2 இலவச ஆட் ஆன் திட்டங்களையும் வழங்குகின்றது.
ரூ.1199 திட்டம்
இதே 1199 ரூபாய் திட்டத்தில் அன்லிமிடெட் கால் சேவையும், இதில் மாதம் 150 ஜிபி டேட்டாவும், தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், ரோலோவர் டேட்டாவாக 200ஜிபியும், 6 மாத அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், 1 வருட டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் சந்தா, ஷா அகாடாமி லைஃப்டைம் சந்தா மற்றும் விங்க் பிரீமியம் உள்ளிட்ட பல சேவைகளுடன் வருகின்றது. இது ரெகுலர் வாய்ஸ் சேவைகளுக்கு மத்தியில் 2 இலவச ஆட் ஆன் திட்டங்களையும் வழங்குகின்றது.
ரூ.1599 திட்டம்
1599 ரூபாய் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை, தினசரி 250ஜிபி டேட்டாவும், ரோல் ஓவர் டேட்டாவாக 200ஜிபியும், அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா 6 மாதத்திற்கும், 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும், தினசரி 100 எஸ் எம் எஸ்-ம் வழங்கப்படுகிறது. இது தவிர ஷா அகாடாமி லைஃப்டைம் சந்தா மற்றும் விங்க் பிரீமியம் உள்ளிட்ட பல சேவைகளுடன் வருகின்றது. இது ரெகுலர் வாய்ஸ் சேவைகளுக்கு மத்தியில் 2 இலவச ஆட் ஆன் திட்டங்களையும் வழங்குகின்றது.
ஏமாற்றம்
இது அமேசான் பிரைம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது வந்துள்ளது. இதன் காரணமாக ஏர்டெல்லின் இந்த திருத்தமானது வந்துள்ளது. இது அமேசான் பிரைம் பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தினை கொடுக்கலாம்.
airtel revises 4 postpaid plans starting at Rs.499, 999, 1199, 1599
airtel revises 4 postpaid plans starting at Rs.499, 999, 1199, 1599/ஏர்டெல் வாடிக்கையாளார்கள் கவனத்திற்கு.. சில திட்டங்களில் திருத்தம்..!