உக்ரைன் வீரர்கள் சிதிலமடைந்த கட்டிடம் ஒன்றின் மறுபக்கம் நிற்கும் ரஷ்யப் போர் வாகனம் ஒன்றை, கட்டிடத்தின் ஊடே தாக்கி அழிக்கும் ஆச்சரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Rubizhne என்ற உக்ரைன் நகரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த உக்ரைன் வீரர்கள், தொலைவில் ஒரு ரஷ்யப் போர் வாகனம் செல்வதைக் கவனித்துள்ளார்கள்.
ஆனால், இரண்டு படையினருக்கும் குறுக்கே, தாக்குதலில் சிதிலமடைந்த ஒரு கட்டிடம் இருந்துள்ளது.
ஆனாலும், உக்ரைன் வீரர்கள் சுட்ட குண்டு, அந்த கட்டிடத்தின் வழியாக பாய்ந்து சென்று, மிகச் சரியாக அந்த ரஷ்யப் போர் வாகனத்தைத் தாக்கியுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோவில், அந்த குண்டு உராய்ந்து சென்றதால், அந்தக் கட்டிடத்திலிருந்து தூசு கிளம்புவதையும், அடுத்த கணம் அந்த ரஷ்யப் போர் வாகனம் வெடித்துச் சிதறுவதையும் காணலாம்.
[CADCEB
]