ஜெய்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தவர் சதீஷ் போனியா.இவர் தனது குடும்பத்தினருடன் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்று விட்டு காரில் சொந்த ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.
பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் பகுதியில் கார் வந்துகொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தனியார் பஸ் மீது மோதி அருகில் உள்ள கால்வாயில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த டாக்டர் சதீஷ்போனியா, அவரது மனைவி சரிதா மகன் ராஜா,மற்றும் உறவினர்கள் ராஜேஸ் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2பேரை காணவில்லை. அவர்களை தண்ணீர் இழுத்து சென்றது. 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.