காலை வாரிய தலைவர், தளபதி: அஜித்தின் உதவியை நாடும் பிரபல நிறுவனம்..!

நடிகர் அஜித்,
எச்.வினோத்
, போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து அதே கூட்டணியில் கடந்த பிப்ரவரி மாதம் ‘வலிமை’ படம் வெளியானது.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘வலிமை’ படம் வசூலில் சக்கை போடு போட்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. மேலும் இந்தப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. வலிமையை தொடர்ந்து ‘
ஏகே 61
’ படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைய உள்ளனர்.

இதனை தொடர்ந்து அஜித்தின் 62 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன்படி லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள ‘ஏகே 62’ படத்தை
விக்னேஷ் சிவன்
இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த வருட இறுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்துள்ளனர்.

இதென்ன புது ட்விஸ்ட்: ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு.!

இந்நிலையில் அஜித்தின் 63 படத்தின் தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப்படத்தை
சிறுத்தை சிவா
இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீரம், விவேகம், விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் – சிவா கூட்டணி இந்தப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் ‘அண்ணாத்த’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனிடையில் ‘ஏகே 61’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜித்தின் பிறந்தநாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rohini Theatre – அஜித் கோட்டையா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.