ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தட் கர்ணா பகுதியில் ஹஜம் மொகல்லா என்ற இடத்தில் அதிக அளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனை போலீசார் மற்றும் படையினர் கைப்பற்றினர். அவற்றில் 10 பிஸ்டல்கள், 17 மேகசின்கள் (தோட்டாக்களை வைக்கும் உபகரணம்), 54 தோட்டாக்கள் மற்றும் 5 எறிகுண்டுகள் ஆகியவை இருந்தன.
இதனை பயங்கரவாதிகள் யாரேனும் விட்டு சென்றார்களா? அல்லது சதி வேலைக்கு பயன்படுத்த கொண்டு வரப்பட்டவையா? என்பன போன்ற விசயங்களை பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.