நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, மக்களுக்கு உதவும் வகையில் பல வகையான இன்சூரன்ஸ் திட்டங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கும் திட்டம் எல்ஐசி-யின் ஜீவன் அமர் பாலிசி பற்றித் தான்.
3 மாதத்தில் ரூ.10000 கோடி லாபம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. அசத்தும் ஹெச்டிஎப்சி வங்கி..!
வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, எல்ஐசி-யின் இன்சூரன்ஸ் திட்டங்கள் அதிக வருமானம் தரக்கூடிய திட்டங்களாக உள்ளன.
இரண்டு திட்டங்கள்
டெர்ம் திட்டமான ஜீவன் அமர் பாலிசியில் இறப்பு பலன்கள் உண்டு. இதில் 2 திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று தொகை உறுதி மற்றும் அதிகரிக்கும் தொகை உறுதி (Sum Assured and Increasing Sum Assured என்ற 2 திட்டங்களை கொண்டுள்ளது. இந்த பாலிசியில் குறைந்த பிரீமியம் செலுத்தி, அதிக பலன்களை பெற முடியும்.
இரண்டு வகையில் க்ளைம்
இந்த பாலிசியில் 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் பாலிசிதாரர் க்ளைம் தொகையை மொத்தமாகவோ அல்லது தவணைகளாகவோ பிரித்தும் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல் இந்த பாலிசிக்கு பிரீமியத்தினை மாத மாதமும், விரைவாகமும் செலுத்தலாம். ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம்.
30 வயதானவர் எவ்வளவு பிரீமியம்?
நீங்கள் 30 வயதுடையவராக இருந்தால், எல்ஐசி ஜீவன் அமர் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், பத்து ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்ட 2.5 லட்ச ரூபாயினை பெறுவதற்கு 3000 ரூபாயினை மாதாந்திர பிரீமியத்தினை செலுத்த வேண்டியிருக்கும்.
பாலிசிதாரர் ஒரு வேளை துரதிஷ்டவசமாக இறந்து விட்டால், பலனை பாலிசிதாரரின் குடும்பத்திற்கு நிதி உதவியாக கிடைக்கும்.
வயது வரம்பு
இப்பாலிசிகள் 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் எடுக்கலாம். பாலிசிதாரரின் 80 வயது வரை காப்பீடு பெறலாம். அதாவது 20 வயதுக்காரர் பாலிசி எடுத்தால் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் காப்பீடு பெறலாம். 50 வயதுக்காரருக்கு 30 ஆண்டுகள் அதிகபட்ச காப்பீட்டுக் காலம். இப்பாலிசியில் விபத்துக்கான ரைடர் பாலிசி, புகை பிடிக்காதோருக்கும் பிரீமியம் குறைவு போன்ற அம்சங்களும் உள்ளன.
LIC jeevan Amar policy gives huge returns at lower premiums
LIC jeevan Amar policy gives huge returns at lower premiums/குறைந்த பிரீமியத்தில் நல்ல வருமானம்.. எல்ஐசி-யின் இந்த பாலிசியை பாருங்க..!