திருவனந்தபுரம்: கேரளாவில் கலப்பு திருமணத்தை எதிர்த்து பெண்ணின் தந்தை தாக்கல் செய்த வழக்கை கேரளா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த செஜினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த ஜோத்ஸ்னா மேரியும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஜோத்ஸ்னாவை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ததாக செஜின் மீது பெண்ணின் தந்தை புகார் அளித்தார்.