சினிமாவை மிஞ்சும் சம்பவம்: தனது ஜோடியை கொன்றவரை 7 முறை தீண்டிய பாம்பு…

ராம்பூர்

1979 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஸ்ரீபிரியா, விஜயகுமார் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் துரை என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த படம் நீயா. தன்னுடைய கணவனை கொன்றவகள் 5 பேரை பாம்பு பழிவாங்குவது போன்ற கதை. பாம்பு இச்சாதாரி என்ற நிலையை அடைய கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அத்தகைய வல்லமை கிடைக்கும் என்பது போல கதையில் சொல்லப்பட்டிருக்கும்.

இது போல்  பாலிவுட்டில், 1954ம் ஆண்டு நாகின் என்ற படத்திலும், 1986ம் ஆண்டு ஸ்ரீதேவி நடித்த நாகினா என்ற படத்திலும், 1976ம் ஆண்டு ரீனாராய் நடித்த நாகின் என்ற படத்திலும் கூட இந்த பாம்பு பழிவாங்கும் கதைகள் கூறப்பட்டுள்ளன.

அதுபோல் பாம்பு பழிவாங்கும் நாகினி டெலிவிஷன் தொடரும் மிக பிரபலம்.

இது போன்ற பல கதைகள் கூறபட்டாலும் தற்போது உத்தரபிரதேசத்தில் இது போன்ற ஒரு உண்மைச்சம்பவம் நட்ந்து உள்ளது. தனது ஜோடியை கொன்றவரை 7 முறை  ஒரே பாம்பு கடித்து உள்ளது. இதில் அந்த மனிதர் 7 முறையும் உயிர் பிழைத்து உள்ளார் என்பதுதான் பெரிய விஷயம்.

உத்தரபிரதேச மாநிலம்  மாநிலம் ராம்பூர் மாவட்டம் ஸ்வார் தெஹ்சில் மிர்சாபூர் பகுதியில் எஹ்சான் என்ற பப்லு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் அருகே ஒரு இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் எஹ்சான் அந்த ஜோடியில் ஆண் பாம்பை கொன்று விடார். பெண் பாம்பு உடனே அங்கிருந்து தப்பி எங்கேயோ சென்றுவிட்டது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள் எப்படியோ வந்த பாம்பு இவரை தீண்டியுள்ளது. இதனால் வலி பொறுக்க முடியாமல் எஹ்சான்  அலறி கத்தியுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்து வீட்டுக்கு வந்தார்.

ஆனால், மறுபடியும் அதே பாம்பு அங்கு வந்து, அவரை மீண்டும் அவரை கடித்துவிட்டது.. இப்படியே ஒரே பாம்பு மொத்தம் 7 முறை கடித்துள்ளது. 7 முறையும் உயிர் தப்பி உள்ளார். 7முறையும் அக்கம்பக்கத்தினர்தான் இவர் உயிரை காப்பாற்றியுள்ளனர். 7 முறை பாம்பு கடித்தால் தான் ஏற்கனவே பாம்பு ஒன்றாக இருக்கும்போது அதில் ஒன்றை மட்டும் கொன்றது தான் இதற்கு காரணம் என்றும், அதுதான் இப்படி வந்து தன்னை பழிவாங்குகிறது என்றும் எஸ்ஸான் அலி வலுவாக நம்புகிறாராம்.

பாம்புக்கும் எஹ்சானுக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில், இயற்கையும் இருவருக்குமே துணை நிற்கிறது. ஆனால் இந்தப் போரின் முடிவு என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது.

இதையும் படிக்கலாம்….சமூக வாழ்க்கை மற்றும் விளையாட்டை மாணவர்கள் மறந்து விட கூடாது- பிரதமர் மோடி அறிவுரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.