பீஜிங் : சீனாவின் வேலையின்மை சதவீதம் அதிகரித்து வருகிறது.
மீண்டும் கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காய் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல லட்சம் பேர் வேலையின்றி தவிக்கும் நிலையில் இந்த ஊரடங்கு மேலும் சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.பிப்ரவரியில் சீனாவில் வேலையின்மை 5.5 சதவீதமாக இருந்தது. ஊரடங்கு காரணமாக தற்போது வேலையிழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
16 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் பலர் வேலை இழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் வேலையின்மை சதவீதம் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சீனாவுக்கு வேலையிழப்பு சதவீதம் அதிகரிப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்த பலனையும் அளிக்கவில்லை.
மக்களிடம் வேகமாக அதிகரித்து வரும் அதிருப்தி அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வேலையின்மை சதவீதம் கட்டுக்குள்தான் உள்ளது, கவலையளிக்கும் விதத்தில் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.
Advertisement