தமிழக சட்டப்பேரவையில் இன்று அ.தி.மு.க உறுப்பினர் கே.பி முனுசாமி, ‘தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்னென்ன’ என்று கேள்வி எழுப்பினார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து தெரிவித்ததாவது,
“இது வரை, 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 69 ஆயிரத்து 385 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளோம். மேலும், புதிய தொழிற்சாலைகளும், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் தொழில் வளர்ச்சியின் பயன் சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் தொழில் முதலீடுகளை தினத்தந்தி பத்திரிக்கை தலையங்கம் பாராட்டியுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமலிருக்க தொழில் வளர்ச்சி அவசியமானதாகும். இதற்கு ஏற்ற வகையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். தொழில்துறையினை சார்ந்தவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.