பக்கிங்காம் கால்வாய் பகுதியை குப்பைகளை பிரிக்கும் இடமாக மாற்றப்பட்ட நிலையை எதிர்த்து, கடந்த 2018-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, குப்பைகளை அகற்றிவிட்டு, மாமல்லபுரத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், மாமல்லபுரத்துக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளிடம் எதற்காக கட்டணம் வசூலிக்கிறீர்கள்? அங்குள்ள குப்பைகளை காணுவதற்கா? என்று கேள்வி சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியது.
இதனை தொடர்ந்து மாமல்லபுரம் சுற்றுலா தளம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யாத அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். விதிகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது