சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு சமர்ப்பித்துள்ளதாக தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கொள்கை குறிப்பு விளக்கத்தின்படி, `டிட்கோ நிறுவனமும் இந்திய விமான நிலைய ஆணையமும் இணைந்து தற்போதுள்ள விமான வசதிகளை விரிவுப்படுத்து தொடங்கியுள்ளன. அதனொரு பகுதியாக சென்னை விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், சென்னை அருகே ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையத்தை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், `பன்னாட்டு விமான நிலையத்தை உருவாக்குவதற்கான சாத்தியம் உள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கான பணியை அரசு, டிட்கோவிடம் ஒப்படைத்துள்ளது. அதில் சாத்தியமுள்ள நான்கு இடங்களை தேர்வு செய்து, அவ்விடங்களில் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளது. அரசின் பரிந்துரைப்படி, 4 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகளின் குழு பார்வையிட்டு அதன் சாத்தியக்கூறு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அறிக்கையின் அடிப்படையில் பொருத்தமான இடம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. இனி புதிய விமான நிலையத்தை நிறுவுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கை விளக்க குறிப்பு வெளிவந்துள்ள இதே நேரத்தில் சட்டப்பேரவையில் தொழிற் துறைக்கான கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை விமான நிலையத்தை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி எதிர்கால தேவைகளை சமாளிக்க சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக சென்னை அருகே உள்ள 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாத்தியக் கூறு அறிக்கை விமான நிலைய ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தை தேர்வு செய்து விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தொழில் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு ஒசூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: ‘பீஸ்ட்’ எதிர்மறை விமர்சனத்தால் இயக்குநரை மாற்றும் ரஜினிகாந்த்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM